தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Cheese Benefits And Risks Is Eating Cheese Good For The Body Is It Bad

Cheese Benefits and Risks : சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெடுதலா?

Priyadarshini R HT Tamil
Feb 05, 2024 03:35 PM IST

Cheese Benefits and Risks : சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெடுதலா?

Cheese Benefits and Risks : சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெடுதலா?
Cheese Benefits and Risks : சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெடுதலா?

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்ம 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் பிரபலமான உணவுகளில் ஒன்றுதான் சீஸ். இதன் நுகர்வு 1970 முதல் 2009க்குள் மும்மடங்காக உயர்ந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எலும்பு ஆரோக்கியம்

சீஸில் கால்சியம், புரதம், மெக்னீசியம், சிங்க், வைட்டமின் ஏ, டி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எலும்பு ஆரோக்கியம் வலுப்பெற உதவுகிறது.

பல் ஆரோக்கியம்

பற்களின் ஆரோக்கியம் மற்றும் வலுப்பெறுவதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. சீஸ் கால்சியம் சத்து நிறைந்தது. சீஸில் கால்சியச்சத்து அதிகம் உள்ளது. இது பல் ஆரோக்கியம் அதிகரிக்க உதவுகிறது. இது பற்களில் கேவிட்டி பிரச்னைகளை எதிர்த்து போராட உதவுகிறது.

ரத்த அழுத்தம்

சீஸ் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கொழுப்பு மற்றும் சோடியம் சத்து குறைவாக உள்ள சீஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஸ்விஸ் சீஸில் இவை குறைவாக உள்ளது. காட்டேஜ் சீஸ், பார்மேஷன் சீஸ், ஃபீட்டா சீஸ், கோட்ஸ் சீஸ் ஆகியவற்றிலும் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளது.

ரத்த நாளங்களின் ஆரோக்கியம் அதிகரிக்க உதவுகிறது

பால் பொருட்களில் அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வயோதிகம் தொடர்பான நரம்பியல் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. ‘

குடல் நுண்ணுயிர்கள் மற்றும் கொழுப்பு

குடலில் நல்ல நுண்ணுயிர்கள் உருவாவதற்கு சீஸ் உதவுகிறது. இது ரத்த கொழுப்பு அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரேக்கியமான உடல் எடை அதிகரிக்க உதவுகிறது

உடல் எடை அதிகமானவர்களுக்கு கால்சியச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சீஸ் உடலுக்கு தேவையான கால்சிய சத்தை வழங்குகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல தேர்வாக சீஸ் உள்ளது.

ஒமேகா ஃபேட்டி – 3 ஆசிட்

சில சீஸ்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. ஆல்பைன் புல்களை சாப்பிட்டு வளரும் மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ஆரோக்கிய செல்கள்

செல்களுக்கு புரதச்சத்து தேவை. ஒரு பீஸ் செடார் சீஸில் 7 கிராம் புரதச்சத்து உள்ளது. ஒருவரின் வயது, எடை மறறும் செயல்திறன் ஆகியவற்றைப் பொருத்து ஒருவருக்கு தேவைப்படும் புரதச்சத்தின் அளவு உள்ளது. எனவே உங்களுக்கு தேவையான அளவை தெரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் சீஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சீஸ் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

சீஸ்ஸில் பல்வேறு வகைகள் உள்ளன. சீஸில் சாச்சுரேடட் ஃபேட் உள்ளது. இது நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகள், ஏற்கனவே செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. சீஸில் சோடியமும் உள்ளது.

இதில் சோடியமும் உள்ளது. கொழுப்புடன் சோடியமும் சேரும்போது, உடலுக்கு பல்வேறு தீமைகளை அவை ஏற்படுத்துகின்றன. அலர்ஜி, உடல் ஏற்கமுடியாமல் போவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சீஸ் ஏற்படுத்துகிறது.

எனவே, சீஸ் எடுக்கும்போது அதிக கவனம் தேவை.

WhatsApp channel

டாபிக்ஸ்