தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மொறு மொறு தோசை முதல் சுவையான மோா் குழம்பு வரை - வேறலெவல் சமையல் டிப்ஸ் இதோ..!

மொறு மொறு தோசை முதல் சுவையான மோா் குழம்பு வரை - வேறலெவல் சமையல் டிப்ஸ் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jan 04, 2024 02:39 PM IST

Cooking Tips: இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும் சூப்பரான சமையல் குறிப்புகள் சிலவற்றை இங்கு காணலாம்.

தோசை, மோா் குழம்பு
தோசை, மோா் குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அருமையான சமையல் டிப்ஸ் இதோ..!

  • வறுத்த ரவையில் தோசை சுட்டால் தோசை மொறுமொறுவென்று வருவதோடு சுவையும் கூடுதலாக இருக்கும்.
  • உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது சிறிதளவு பைத்தம் பருப்பு மாவு தூவி எண்ணெய்யில் பொரித்தால் சிப்ஸ் நல்லா மொருமொருப்பாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
  • இட்லி பொடி அரைக்கும் பொழுது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அரைத்தால் பொடி ருசியாக இருக்கும்.
  • தேங்காயை நன்கு துருவி, தோசை சுடும்போது தேங்காய் துருவலை தோசை மேல் தூவி சுட்டுப்பாருங்கள். அதன் சுவையே வேற லெவல்.
  • கீரை, வெண்டைக்காய் ஆகியவற்றை வேகவைக்கும் போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் காயின் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.
  • அரிசி மாவுடன் சிறிதளவு சோளமாவு சேர்த்து கலந்து தோசை சுட்டால் தோசை ருசியாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
  • தேங்காய் சாதம், லெமன் சாதம் போன்ற கலவை சாதங்கள் செய்யும் போது பொறிகடலையை நன்கு வறுத்து போட்டு கிளறினால் மிகவும் சுவையானதாக இருக்கும்.
  • முட்டையை வேக வைக்கும் போது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சோ்த்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
  • புளி குழம்பு தயாா் செய்யும்போது சிறிதளவு வெந்தயம் சோ்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
  • மோர் குழம்பு செய்து முடித்து இறக்கும் பொழுது சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் குழம்பு செம்ம ருசியாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.