தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tips For Soft Feet: பாதங்கள் அழகாக தொிய வேண்டுமா? இதோ உங்களுக்கான ஈஸி டிப்ஸ்!

Tips For Soft Feet: பாதங்கள் அழகாக தொிய வேண்டுமா? இதோ உங்களுக்கான ஈஸி டிப்ஸ்!

Karthikeyan S HT Tamil
Jan 03, 2024 08:25 PM IST

அழகு என்பது முகத்திற்கு மட்டும் கிடையாது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அதில் பங்கு உண்டு.

மென்மையான பாதம்
மென்மையான பாதம்

ட்ரெண்டிங் செய்திகள்

முகத்தின் அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் பாதத்தின் அழகிற்கும் கொடுக்க வேண்டும். நம்முடைய மொத்த உடலையும் தாங்கி சுமப்பது நாம் நினைக்கும் இடங்களுக்கு அழைத்து செல்ல கூடிய பாதங்களும் உடலின் முக்கியமான உறுப்பு தான். அழகு என்பது முகத்திற்கு மட்டும் கிடையாது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அதில் பங்கு உண்டு. எனவே, நம்முடைய கால் பாதங்களை வீட்டிலேயே பராமரிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

  • சாதாரணமாக வீட்டிற்குள் நடக்கும் போது செருப்புகளை பயன்படுத்தலாம். அதன் மூலம் பாதங்களில் கறை பிடிப்பதை தவிர்க்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத்தின் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் பகுதியில் உள்ள வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் கிருமிகளையும் அழிக்கும்.
  • பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில் சுமாா் 20 நிமிடம் மூழ்கவிடவும். பின்னா் பாதத்திற்கான ஸ்க்ரைப்பரைக் கொண்டு நன்கு தேய்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பாதங்கள் சுத்தமாக காட்சியளிக்கும்.
  • கால்களை மடக்குவது, நீட்டுவது, நடப்பது உள்ளிட்ட சில வகை உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மெல்லிய சூட்டில் பாதத்தைக் கழுவுதல் ஆகியவை பாதத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
  • தினமும் இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பின்பு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
  • பாதத்தில் வெடிப்பு இருந்தால் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து அந்த இடங்களில் 5 நாட்களுக்கு ஒரு முறை தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும் வெடிப்பினால் உண்டான கருமை நீங்கி, பாதம் மிளிரும்.
  • கால் விரல் நகத்தின் அழுக்கு நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.பொதுவாக வெயிலிலும் சாி, பனியிலும் சாி பாதத்தை பாதுகாக்க பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது ஒரு சிறந்த பாதுகாப்பாகும்.

பொறுப்பு துறப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.