Migraine Pain: ஒற்றை தலைவலி எதனால் வருகிறது?..மருத்துவர் சொல்லும் தீர்வு என்ன? - முழு விபரம் இதோ..!
Migraine Pain: அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும். அதை சரிசெய்யக்கூடிய அருமருந்து பற்றி பார்ப்போம்.

உலகம் முழுவதும் பொதுவாகக் காணப்படக்கூடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று தான் ஒற்றைத் தலைவலி (Migraine). உலக அளவில் 14.7 சதவீதத்தினர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 7 பேரில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக சைனஸ் நோய் பிரச்னை உள்ளவர்களில் நூற்றில் 90 பேருக்கு குளிர்காலத்தில் ஒற்றைத் தலைவலி இருந்துகொண்டே இருக்கும். இந்த ஒற்றை தலைவலியானது 75 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
பக்கவாத ஒற்றைத் தலைவலி, கண் நரம்பு ஒற்றைத் தலைவலி, முக நரம்பு ஒற்றைத் தலைவலி என ஒற்றைத் தலைவலியில் பல வகை உண்டு. அதிலும், குறிப்பாக ஒற்றைத் தலைவலி 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும்.
ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?
அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.
ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதை தடுக்க ஆயுர்வேத மருத்துவர் கெளதம் சொல்லக்கூடிய தீர்வுகள் பற்றி இனி பார்ப்போம். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒற்றை தலைவலிக்கு சிறந்த மருந்து கடுகு, மூக்கிரட்டை இலை மற்றும் சுக்கு. 10 மூக்கிரட்டை இலைகளை எடுத்து நான்கு சிட்டிகை கடுகுடன் சேர்த்து நன்றாக அரைத்து தலைக்கு பற்றிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒற்றை தலைவலி பிரச்னை சரியாகும். கோடை காலம், குளிர் காலம், மழை காலம் அல்லாமல் மற்ற நேரங்களில் ஏற்படும் தலைவலிக்கு, 200 மில்லி அளவுக்கு தண்ணீர், 5 கிராம் அளவுக்கு சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதில் 10 சொட்டு எலுமிச்சை சாறு, 10 சொட்டு தேன் சேர்த்து காலை உணவுக்கு முன்பும் மற்றும் மாலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் எல்லாவிதமான தலைவலியும் குணமாகும்.
அதேபோல், ஒற்றை தலைவலிக்கு சுக்கினை அரைத்து தலைக்கு பற்றிடலாம் அல்லது சுக்கு சேர்த்த நீர்க்கோவை மாத்திரை என்ற சித்த மருந்தினை பற்று போடவும் நல்ல தீர்வு கிடைக்கும். சுக்கினை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அருந்த ஒற்றை தலைவலிக்கு நல்ல பலன் தரும். அதனால் ஏற்படும் வாந்தியும், வாய்க்குமட்டலும் நின்றுவிடும்.
ஊட்டச்சத்து குறைபாடு, மனஅழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை சரிசெய்ய நமக்கு தேவைப்படுவது ஒரு சிறு மூலிகை சாறு. அதாவது, அரை மாதுளை பழம், நான்கு பேரிச்சம்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் கசகசா, 300 மில்லி கொதி நீர் இதையெல்லாம் மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டிய பிறகு சூடாக சாப்பிட வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக அரைத்து சாப்பிடுவதன் மூலம் தூக்கமின்மையால், மன அழுத்தத்தால், மன சோர்வால் ஏற்படக்கூடிய சில வகை தொற்றுகள், வைரஸ் சம்பந்தப்பட்ட தொற்றுகள் தீவிரத்தை சரி செய்யும். மேலும், தலைக்கு செல்லக்கூடிய ரத்த உற்பத்தியை தூண்டக்கூடிய செயலும் நடைபெறும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்