தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Check Out The List Of Cancer Fighting Foods Which Also Reduce Risk Of Disease

Cancer fighting foods: புற்று நோய் பாதிப்பை வெகுவாக குறைக்கும் டாப் உணவுகள் எவை தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 17, 2024 03:58 PM IST

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கூட புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் தன்மை இருப்பது பலருக்கு தெரியாது. அந்த வகையில் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் டாப் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்.

புற்று நோய் பாதிப்பை வெகுவாக குறைக்கும் உணவுகள்
புற்று நோய் பாதிப்பை வெகுவாக குறைக்கும் உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலேயே புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் பண்புகள் ஏராளமான இருக்கின்றன. எனவே அந்த உணவுகளை உங்களது டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் நோய் பாதிப்பின் அபாயத்தை வெகுவாக குறைக்கலாம்

குறிப்பாக புற்றுநோய் பாதிப்புக்கான சிகிச்சை காலங்களில் ஊட்டச்சத்து மிகக உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் குணமாகுதல் என்பது விரைவாக நிகழ்கிறது.

புற்றுநோய் பாதிப்பு தடுக்கும் அல்லது நோய் பாதிப்பின் தீவரத்தை குறைத்து விரைவில் குணமடையை செய்யும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

மஞ்சள் 

புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானதாக இருக்கிறது. மஞ்சளில் இருக்கும் பாலிஃபினால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. இதில் இருக்கும் குர்குமின் என்ற சேர்மானம் புற்றுநோய் செல்களின் எதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது. நோய் பாதிப்பை உருவாக்கும் புண்களை ஆற்றும் சக்தியையும் மஞ்சள் கொண்டிருக்கிறது

பூண்டு மற்றும் இஞ்சி

 பூண்டில் இருக்கும் கந்தகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் பைட்டோகெமிக்கல் நோய் பாதிப்பை தடுக்கும் ஆற்றலை கொண்டிருப்பதுடன், வயிற்றில் ஏற்படும் கட்டிகளை குறைக்க உதவுகிறது. இஞ்சியில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணமான ஜிஞ்சரால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் புராஸ்டேட் புற்று நோய் பாதிப்பை குறைக்கிறது

எள்ளு: வயிற்றில் இருக்கும் புண்ணை குணமாக்கும் தன்மை எள்ளில் உள்ளது. இதில் இடம்பிடித்திருக்கும் துத்தநாகம் தோல் தொடர்பான புற்றுநோய் பாதிப்பை தடுக்கும்.

மசாலா பொருள்கள்

பட்டை, மிளகு போன்ற மசாலா பொருள்களில் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் தன்மை அதிகமாகவே இருக்கிறது. பட்டையில் இருக்கும் வைட்டமின் ஏ,சி, ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நுரையிரல் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது.

அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட மிளகு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது

முளைக்கட்டிய பயறு மற்றும் பச்சை பட்டாணி

முளைக்கட்டிய பயறுகளில் லைசின் என்கிற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் சல்ஃபோராபேன் என்கிற சேர்மானம் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. வெறும் பயறுகளை விட முளைக்கட்டிய பயறுகளில் சல்ஃபோராபேன் அளவு 50 சதவீதம் வரை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது

வைட்டமின் சி, கோமெஸ்ட்ரோல் போன்று நுண் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் பச்சை பட்டாணி ரத்த புற்று நோய், நுரையிரல், ஆசணவாய் புற்றுநோய் பாதிப்பின் தாக்கத்தை குறைக்கிறது.

முட்டைக்கோஸ்

இதில் இருக்கும் நியூட்ரியன்ட்ஸ் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும் தன்மை கொண்டிருக்கிறது. முட்டைக்கோஸில் இருக்கும் இன்டோல்கார்பினோல் மார்பக புற்றுநோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது

கேரட்

பீட்டாகரோடீன் அதிக நிறைந்திருக்கும் கேரட் அனைத்து வகை புற்றுநோய் பாதிப்பின் தீவரத்தை வெகுவாக குறைக்கிறது.

தக்காளி

ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக கொண்டிருக்கும் தக்காளியில் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து புற்று நோய் செல்கள் பாதிப்பு அடைவதை குறைக்கும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்