எடையிழப்பு, சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம்.. கொப்பரை தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அடுக்கடுக்கான நன்மைகள்
பச்சை தேங்காயை போல் உலர வைக்கப்பட்ட கொப்பரை தேங்காயும் எடையிழப்பு, சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் உள்பட பல்வேறு நன்மைகளை கொண்டதாக உள்ளது. கொப்பரை தேங்காயை அப்படியே சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

உலர்த்து காய்ர்ந்த தேங்காயை, கொப்பரை தேங்காய் என்று அழைக்கிறோம். இந்த கொப்பறை தேங்காய் கறிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் உணவு நினைக்க வேண்டாம். இதை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். ஏனென்றால் இதில் எதிர்பாராத பல நன்மைகளையும் ஒளிந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் எடை மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு கண்டிப்பாக குறையும் என கூறப்படுகிறது.
பொதுவாக தேங்காய்களை சமையலில் துருவலாகவோ அல்லது சிறு துண்டுகளாகவோ தான் பயன்படுத்துகிறோம். தேங்காய் போல் உலர்த்தப்பட்ட தேங்காயான கொப்பரை தேங்காயும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம்.
தேங்காயை விட உலர வைக்கப்பட்ட கொப்பரை தேங்காய் சுவை மிக்கதாக மட்டுமல்லாமல் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். சைவம், அசைவம் என அனைத்து வகை உணவுகளிலும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. சட்னி, பொறியல், கூட்டு, குழம்பு, சாம்பார் என பல வகைகளில் தேங்காயை சேர்த்து சாப்பிடுவது அந்த உணவின் சுவையை கூடுதலாக மெருகேற்றும். தேங்காயை போல் கொப்பரை தேங்காயும் சுவையுடன், ஆரோக்கிய நன்மைகள் கொண்டதாவும் உள்ளது.