கன்னத்தில் தேவையற்ற கொழுப்பா?.. கவலையை விடுங்க.. குறைக்க உதவும் எளிய உதவிக் குறிப்புகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கன்னத்தில் தேவையற்ற கொழுப்பா?.. கவலையை விடுங்க.. குறைக்க உதவும் எளிய உதவிக் குறிப்புகள் இதோ..!

கன்னத்தில் தேவையற்ற கொழுப்பா?.. கவலையை விடுங்க.. குறைக்க உதவும் எளிய உதவிக் குறிப்புகள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Published Jun 19, 2025 11:47 AM IST

கன்னத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பது எப்படி என்பது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

கன்னத்தில் தேவையற்ற கொழுப்பா?.. கவலையை விடுங்க.. குறைக்க உதவும் எளிய உதவிக் குறிப்புகள் இதோ..!
கன்னத்தில் தேவையற்ற கொழுப்பா?.. கவலையை விடுங்க.. குறைக்க உதவும் எளிய உதவிக் குறிப்புகள் இதோ..!

வீட்டிலேயே எளிமையான முறையில் சில பயிற்சிகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கன்னத்தில் உள்ள தேவையற்ற தசைகள் கரைந்து, காணாமல் போய்விடும். கன்னத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

உடல் எடை அதிகமாக இருப்பதன் காரணமாகவும் முகத்தில் சதை அதிகம் தோன்றலாம். எனவே உணவுக் கட்டுப்பாடு அவசியம். கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக உடல் எடை குறையும் போது முகத்தில் உள்ள கொழுப்பும் கரையும்.

உடல் எடை சரியாக இருந்தும் முகத்தில் சதைகள் அதிகம் இருந்தால் முகத்திற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்யலாம். கன்னப்பகுதி, தாடை, தொண்டைப் பகுதியில் உள்ள சதைகளைக் குறைக்க லேசான பயிற்சிகள் உள்ளன. உதட்டைக் குவித்து, வானத்துக்கு முத்தம் கொடுப்பதைப் போல வைத்துக்கொண்டு பயிற்சி செய்வதன் மூலம் தொண்டையை வலுப்படுத்த முடியும். இதைச் செய்வதால் குரலும் வலுப்பெறும்.

இரவில் குறைந்தது 7-8 மணி நேரம் நல்ல தூக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதலைக் குறைக்க வேண்டும் அல்லது முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். சருமத்தில் ரத்த ஓட்டம் சீராக அவ்வப்போது மசாஜ் செய்ய வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதுவும் தேவையற்ற கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற உடல் கொழுப்பை எரிக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.