Weight Loss Tips: அலுவலகத்தில் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் இத்தனை நன்மைகளா?
உடல் எடை அதிகரித்த பிறகு உடற்பயிற்சி, ஜிம் செல்வதைவிட அவ்வப்போது உடலை இயக்கத்தில் வைத்திருப்பது உடல் நலனுக்கு சிறந்தது.

இன்றைய பாஸ்ட் புட் உலகில் பலரும் சிரமப்படுவது உடல் எடை அதிகரிப்பு. உடல் எடை அதிகரிப்பு என்பது பல்வேறு விதமான ஆபத்துகளை ஏற்படுத்தி விடும் என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. உடல் பருமனால் சர்க்கரை நோய், ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை என்று உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும் அதிகம். எனவே உடல் எடையை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். குறிப்பாக அலுவலகத்தில் பலமணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் எவ்வாறு உடல் எடையை சமநிலையாக வைத்திருக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
அலுவலகத்தில் வேலை செய்யும்போதே உங்கள் உடல்நலத்திலும் சிறிது கவனம் செலுத்தினால் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். உடல் இயக்கமின்றி இருப்பதால் உடலில் கொழுப்பு தேங்கி உடல் எடை அதிகரிப்பு முதல் இதய நோய்கள் வரை பலவிதமான நோய் அபாயங்கள் ஏற்படும் சூழல் உருவாகும்.
உடற்பயிற்சி செய்வதைவிட அவ்வப்போது உடலை இயக்கத்தில் வைத்திருப்பது உடல்நலனுக்கு சிறந்தது. ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான நேரம் அலுவலகத்தில் இருப்பதால் இந்த நேரத்தில் உங்களின் உடல்நிலை குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உடல் எடை அதிகரித்த பிறகு உடற்பயிற்சி, ஜிம் செல்வதைவிட அவ்வப்போது உடலை இயக்கத்தில் வைத்திருப்பது உடல் நலனுக்கு சிறந்தது.