90ஸ் கிட்ஸின் குழந்தைப் பருவ கொண்டாட்டங்களுள் ஒன்றான கொடுக்காப்புளியின் நன்மைகளை பாருங்கள்!
90ஸ் கிட்ஸின் குழந்தைப் பருவ கொண்டாட்டங்களுள் ஒன்றான கொடுக்காப்புளியின் நன்மைகளை பாருங்கள். எண்ணற்ற நன்மைகளுடன் ஆற்றலைத்தருகிறது.
குழந்தைப்பருவத்தில் எல்லோரும் கட்டாயம் ருசித்திருக்கும் பழங்களுள் ஒன்றுதான இந்த கொடுக்காப்புளி. இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும் வல்லமை கொண்டது. கொடுக்காப்புளி துவர்ப்பு கலந்த இனிப்பு சுவை நிறைந்ததாக இருக்கும். இதன் மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கிளைகள் முட்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த பழம் பச்சை நிறத்தில் இருக்கும் அல்லது பிங்க் நிறத்திலும் இருக்கும். தோலை உரித்தால் உள்ளே உள்ள பழத்தின் விதையை நீக்கிவிட்டு சாப்பிடவேண்டும். இந்த மரம் இந்தியா மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வளர்கிறது. இதன் பழங்கள் சாப்பிட ஏற்றது மட்டுமல்ல எண்ணற்ற நற்குணங்களைக் கொண்டது. இதில் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. பற்களை வலுப்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதில் உள்ள கலோரிகள், புரதச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் என அனைத்தும் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. செரிமானத்தை ஏற்படுத்தி பசியைத் தூண்டுகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துக்கள், வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள், இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைக்கு காரணமாகிறது. மேலும் இதில் ஃபினோலிக் உட்பொருட்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் குயிர்சிடின்கள் உருவாக காரணமாகிறது. இந்தப்பழங்களை அப்படியே சாப்பிடலாம் அல்லது டீ மற்றும் எலுமிச்சை பழத்தின் சாறில் கலந்து பருகலாம்.
உடல் எடை குறைப்பு
கொடுக்காப்புளியில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. சாப்பிடும் உணர்வைக் குறைத்து நீங்கள் அதிகம் ஸ்னாக்ஸ் சாப்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. கொடுக்காப்புளி பழங்களில் ஊறிய எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் பருகினால், அது உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான அளவு கலோரிகளை குறைக்கிறது. உங்கள் உடல் எடையை முறையாக பராமரிக்கச் செய்கிறது.
குடல் பிரச்னைகளை சரிசெய்கிறது
கொடுக்காப்புளியில் ஃப்ளாவனாய்ட்கள் மற்றும் குயிர்சிடின்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடல் மற்றும் குடலில் உள்ள ஆபத்துக்களை விளைவிக்கும் ஃப்ரி ராடிக்கல்கள் மற்றும் நச்சுக்களை அகற்றுகிறது. இதனால் உங்களுக்கு வயிற்றுப்போக்கு எற்பட்டால் அதை குணப்படுத்துகிறது.
நீரிழிவு நோய் அறிகுறிகள்
நீரிழிவு நோய் அறிகுறிகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஆன்டி ஹைப்பர்கிளைசமிக் குணங்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது. இந்த துவர்ப்புச் சுவை நிறைந்த பழத்தை நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால் அது உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உங்கள் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும்.
எலும்பு மற்றும் தசைகள்
கொடுக்காப்புளியில் எண்ணற்ற கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது. இந்த இரு மினரல்களும்தான், எலும்பை வலுவாக்கவும், அதை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள புரதச்சத்துக்கள், ஆரோக்கியமான மற்றும் தசைகளை வலுவடையச் செய்கிறது. எலும்புகளுக்கும், தசைகளுக்கும் நெகிழ் தன்மை மற்றும் இயங்கும் தன்மை தேவை. இது உங்கள் உடலில் நிலைத்தன்மையையும், சமத்தையும் ஏற்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு
கொடுக்காப்புளியில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்களுக்கு நல்லது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உங்கள் உடல் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடச் செய்கிறது. வைட்டமின் சி சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கரும்புள்ளிகளை நீக்கி முகத்தில் பொலிவை ஏற்படுத்துகிறது.
வாய் ஆரோக்கியம்
கொடுக்காப்புளியின் சிறிய துண்டுகளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் குவிந்துள்ளது. இது உங்கள் எலும்புகளுக்குத் தேவையான மினரல்களைக் கொடுக்கிறது. இது உங்கள் பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வாய் அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
மனஅழுத்தம் மற்றும் பதற்றம்
கொடுக்காப்புளியில் டானின்கள், ஃப்ளாவனாய்ட்கள், ஆல்கலாய்ட் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த ஃபைட்டோநியூட்ரியன்ட்கள், உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றன. மூளை ஆரோக்கியத்தை காக்கிறது. மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது. பயம், பதற்றம், மனஅழுத்தம் போன்ற எதிர்மறை எண்ணங்களை மாற்றி நேர்மறையாக்குகிறது.
பக்கவிளைவுகள்
கொடுக்காப்புளியின் ஊட்டச்சத்து அளவுகளால் நீங்கள் அதை தினமும் உட்கொள்ளலாம். ஆனாலும் அளவாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இது குறிப்பிட்ட சீசனில் மட்டும்தான் கிடைக்கும். இதை அதிகம் எடுத்துக்கொண்டால் அது கண்களில் எரிச்சல், சருமத்தில் அரிப்பு ஆகிய அலர்ஜி அறிகுறிகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிடக்கூடாது. இதை அதிகம் எடுத்துக்கொண்டால், அது உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்