Ash Gourd Benefits: நாள்தோறும் வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் தெரியுமா?
உடல் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தும் காய்கறிகளில் ஒன்றாக வெள்ளை பூசணி உள்ளது. உடலில் கெட்ட நீரை வெளியேற்றவும் நீரேற்றத்துடன் வைக்கவும் உதவுகிறது.
நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முக்கியமானதாக வெள்ளை பூசணி இருந்து வருகிறது. இதில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பதோடு, உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்கி, சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
நார்ச்சத்துகள் அதிக நிறைந்த பூசணி வயிறு, ரத்தத்தைத சுத்தப்படுத்தும் அருமருந்தாகவே இருந்துவருகிறது. வெள்ளை பூசணியை வைத்து பொறியில், கூட்டு தயார் செய்து வழக்கமாக பலரும் சாப்பிடுவதுண்டு.
வெள்ளை பூசணியை சாறாக தயார் செய்து வெறும் வயிற்றில் பருகுவதால் ஏராள ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். வெள்ளை பூசணி சாறு தரும் உடல் ஆரோக்கிய நன்மைகள் இதோ
ரத்த சுத்திகரிப்பு
வெள்ளை பூசணியை சாறாக்கி அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இரு வேளையும் பருகி வந்தால் ரத்த சுத்தகரிக்கப்பட்டு, சுத்தமாகும். இதனால் உடல் நோய் பாதிப்பு தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்
சிறுநீரக தொற்றுக்கு நிவாரணம்
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் ரத்தம் வெளிவருவது, அல்சர் காரணமாக உடலினுள் ரத்த கசிவு ஏற்படுவதும், பைல்ஸ் பாதிப்பால் ரத்த கசிவு ஏற்படுவதற்கும் நிவாரணம் அளிக்கிறது வெள்ளை பூசணி சாறு.
சிறுநீரகம் தொடர்பான நோய் பாதிப்பு இருப்பவர்கள் வெள்ளை பூசணி சாறுடன் சிறிது அளவு சர்க்கரை அல்லது தேன் கலந்த சாப்பிட்டு வந்தால் நோய் பாதிப்பு குணமாகும்.
உடல் சூட்டை தணிக்கும்
வெள்ளை பூசணியில் இடம்பிடித்திருக்கும் ஆக்ஜினேற்ற தன்மை உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. அத்துடன் உடலில் நீர் இழப்பு ஏற்படாமக் நீரேற்றத்துடன் இருக்க வைக்க தன்மையை கொண்டுள்ளது. இதனால் உடலும் குளிர்ச்சியுடன் இருக்கும்.
எடை குறைப்பு
கலோரிகள் குறைவாக இருக்கும் வெள்ளை பூசிணி இருக்கிறது. தினமும் காலையில் இதன் சாறு பருகுவதன் மூலம் உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி நீர்ச்சத்தை அதிகிரிக்கிறது. இதனால் உடல் எடை குறைப்புக்கும் வழிவகுக்கிறது.
அதேபோல் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுவதன் மூலம் வயிற்றில் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.
அல்சருக்கு அருமருந்து
அல்சர் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த அருமருந்தாக வெள்ளை பூசணி உள்ளது. அதிக காரணமான உணவுகள், நீண்ட நேரம் உணவும் உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்னைக்கு தீர்வாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்