தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Check Out The 5 Home Remedies To Protect Your Skin From Sun

Skin Care Tips: கோடை வெயிலில் இருந்து முகம், சருமத்தை பராமரிப்பது எப்படி?..ஈஸியான டிப்ஸ் இதோ..!

Karthikeyan S HT Tamil
Mar 25, 2024 07:38 PM IST

Summer Tips: கோடை வெயிலில் இருந்து முகம் மற்றும் சருமத்தைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கோடைக் காலத்தில், சருமத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

Skin Care
Skin Care

ட்ரெண்டிங் செய்திகள்

கோடைக்காலம் சருமத்தையும் கூந்தலையும் நிச்சயம் பாதிக்கிறது. கொஞ்ச நேரம் வெளியே போனாலும்.. சூரியன் தன் கோபத்தை நம் மீது காட்டும். இதனால் சருமம் கருப்பாக மாறும் சூழல் உருவாகும். சூரியனின் புற ஊதா (UV) கதிர்கள் தோல் மற்றும் முடியை சேதப்படுத்துகின்றன. சன்ஸ்கிரீன் மூலம் சூரிய பாதிப்புகளை குறைக்கலாம். ஆனால் வெயிலைத் தடுக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய இயற்கை தீர்வுகளும் உள்ளன. உங்கள் சருமம் மற்றும் தலைமுடியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க இயற்கை உங்களுக்கு வீட்டு வைத்தியத்தை வழங்கியுள்ளது.

உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் பராமரிக்க உங்கள் தோல் மற்றும் முடியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது அவசியம். வீட்டு வைத்தியம் சில பாதுகாப்பை அளிக்கும். சன்ஸ்கிரீன், பாதுகாப்பு உடைகள் மற்றும் அதிக சூரிய ஒளியைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அவற்றுடன் சில வீட்டு வைத்தியங்களும் இங்கே உள்ளன. கோடைக் காலத்தில், சருமத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

கற்றாழை ஜெல்:

புதிய கற்றாழை ஜெல்லை சூரிய ஒளி படும் இடங்களில் தடவவும். கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது வீக்கம் மற்றும் கருநிறத்தை குறைக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் இயற்கையான சில சிறப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஈரப்பதம், இலகுரக சூரிய பாதுகாப்புக்காக வெயிலில் செல்வதற்கு முன் உங்கள் தோலில் தேங்காய் எண்ணெயை தடவவும்.

சன்ஸ்கிரீன்:

கோடைக் காலத்தில் தோல் பராமரிப்பில் சன்ஸ்கிரீன் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் வெளியே செல்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சிறந்தது ஆகும். இதன் மூலம் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க இது உதவும்.

வெள்ளரிக்காய்:

வெயிலில் எரிந்த பகுதிகளில் வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கவும். வெள்ளரிகள் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளன. இவை உங்கள் சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

தயிர்:

தயிர் உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில் தயிரை பயன்படுத்தலாம். தயிரை உங்கள் தோலில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருக்கவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்யும்.

வைட்டமின் சி உணவுகள்:

கோடை காலத்தில் எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம். பீட்ரூட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், நீர்மோர், கேரட் ஜூஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்