சத்தான மற்றும் ருசியான பீட்ரூட் வடையை செய்வது எப்படி என்று பாருங்க! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சத்தான மற்றும் ருசியான பீட்ரூட் வடையை செய்வது எப்படி என்று பாருங்க! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!

சத்தான மற்றும் ருசியான பீட்ரூட் வடையை செய்வது எப்படி என்று பாருங்க! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!

Priyadarshini R HT Tamil
Oct 08, 2024 11:15 AM IST

சத்தான மற்றும் ருசியான பீட்ரூட் வடையை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்!

சத்தான மற்றும் ருசியான பீட்ரூட் வடையை செய்வது எப்படி என்று பாருங்க! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!
சத்தான மற்றும் ருசியான பீட்ரூட் வடையை செய்வது எப்படி என்று பாருங்க! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!

நீங்கள் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமுடனும் இருக்க அவை உதவுகின்றன. உங்கள் வாழ்வில் பீட்ரூட்டை சேர்ப்பதற்கான 6 முக்கிய காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள். ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. உடல் எடை குறைக்க உதவுகிறது. 100 கிராம் வேகவைத்த பீட்ரூட்டில் 44 கலோரிகள், 1.7 கிராம் புரதம், 0.2 கிராம் கொழுப்பு, 2 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள்தான் இதை கலோரிகள் குறைந்த உணவாக மாற்றுகிறது. ஆனால் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஆற்றலை அதிகரிக்கிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. குடல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பீட்ரூட்டில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருள்கள்

பீட்ரூட் – 2 (சிறியது)

பெரிய வெங்காயம் – 1

கடலை பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வர மிளகாய் – 2 (உங்களுக்கு தேவையென்றால் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்)

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை –

கடலைபருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வர மிளகாய், சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். பீட்ரூட்டை துருவியும் வைத்து கொள்ளவேண்டும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பீட்ரூட், வெங்காயம், கறிவேப்பிலை, கடலை பருப்பு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

மாவை சிறிது எடுத்து உருண்டைகளாக உருட்டி, பின் வடை போல் தட்டிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய்விட்டு, அது நன்றாக சூடானவுடன், தட்டிய வடைகளைப் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். இருபுறமும் பிரட்டிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் பிங்க் வண்ணத்தில் சூப்பர் சுவையான பீட்ரூட் வடை கிடைத்துவிடும்.

இதை மாலை நேர சிற்றுண்டி அல்லது உணவுடன் தொட்டுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம். பீட்ரூட்டுக்கு பதில் கேரட்டும் சேர்த்துக்கொள்ளலாம். கேரட், பீட்ரூட் இரண்டும் சேர்த்தும் செய்யலாம். இவையெல்லாம் பீட்ரூட் வடையில் உள்ள பல்வேறு வடிவங்கள்.

குறிப்புகள்

கடலை பருப்பை அரைக்கும்போது தண்ணீர் சேர்க்கக்கூடாது. ஏனென்றால் நீங்கள் தண்ணீர் சேர்த்து அரைத்தால் கடைசியாக பீட்ரூட் சேர்த்து கலக்கும்போது அது மிகவும் அதிகம் தண்ணீர் விட்டுவிடும். அதுபோது தண்ணீர் விட்டாலும் பச்சரிசி மாவை கலந்து சரிசெய்து வடைகளை தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்கள் கார அளவுக்கு ஏற்ப மிளகாய் அளவை அதிகரித்து அல்லது குறைத்துக்கொள்ளலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்கத் தூண்டும் சுவையானது.

சில குழந்தைகள் பீட்ரூட் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இந்த பீட்ரூட் வடையை செய்து கொடுத்தால் நல்லது. அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பீட்ரூட்டும் அவர்களுக்கு உணவில் சாப்பிடதுபோல் ஆகிவிடும். ஏனெனில் குழந்தைகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளுள் ஒன்று பீட்ரூட்.

இந்த வடையை மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ளும்போது, இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்ல கம்போவாக இருக்கும். திடீர் உறவினர்களுக்கும் எளிதாக செய்து அசத்தலாம் போன்ற எண்ணற்ற நன்மைகள் உள்ளது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.