Channa Salad : அவல் கொண்டைக்கடலை சாலட்! தின்ன தின்ன தெவிட்டாத சுவை மட்டுமல்ல; ஆரோக்கியமும்தான்!
Channa Salad : கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இறைச்சி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த உணவு. புரதச்சத்து எடை மேலாண்மை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசையை வலுப்படுத்த உதவுகிறது. கொண்டைக்கடலையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களில் உள்ள புரதத்தைவிட சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தேவையான பொருட்கள்
கெட்டி அவல் - 1 கப்
வேகவைத்த கொண்டைக்கடலை – அரை கப்
வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
கேரட் - 1
கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – கால் கப்
புளி – கால் ஸ்பூன் அளவு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
செய்முறை
அவலை இரண்டு முறை நன்றாக கழுவி தண்ணீரை முழுவதும் வடித்துக்கொள்ளவேண்டும். பின் இளம் சூடான நீரை மூழ்கும் அளவு ஊற்றி 20 நிமிடங்கள் மூடி வைக்கவேண்டும்.
ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவேண்டும். இது ஒன்றிரண்டாக திப்பித்திப்பியாக இருக்க வேண்டும்.
வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். கேரட்டை துருவிக்கொள்ளவேண்டும்.
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் ஊறவைத்த அவல் மற்றும் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, தேங்காய் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கலந்துகொள்ளவேண்டும்.
கடைசியாக பொடியாக நறுக்கிய தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் துருவிய கேரட், மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவேண்டும்.
சிறிய துண்டு புளி ஊறவைத்த அவலோடு சேரும் போது சுவை நன்றாக இருக்கும். புளி சேர்க்காமலும் செய்யலாம். பேப்பர் அவல் வைத்து செய்தால் ஊறவைக்க வேண்டாம்.
இந்த சாலட்டை ஒரு சூப்பர் சக்தி சாலட் என்று கூறலாம். பொதுவாக சாலட்களில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், மற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
இந்த சாலட்டிலும் பல்வேறு சத்தான பண்புகளைக் கொண்ட அவல், புரதம் நிறைந்த கொண்டைக்கடலை மற்றும் நார்ச்சத்திற்காக வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளை சேர்த்துள்ளதால் இந்த சால்ட் காலை உணவிற்கு ஏற்றதாகும்.
காலை உணவிற்கு மிகவும் எளிதாக இந்த சூப்பர் சாலட்டை செய்யலாம். அந்த நாளுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. சிவப்பு அவல், பாரம்பரிய அரிசி அவல் என எந்த அவலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எடுக்கும் அவலுக்கு ஏற்ப அதை ஊறவைத்தும், வைக்காமலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொண்டைக்கடலையில் உள்ள சத்துக்களும், நன்மைகளும்
ஒரு கப் கொண்டைகடலையில் 269 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 14.5 கிராம், கொழுப்பு 4 கிராம், கார்போஹைட்ரேட் 45 கிராம், நார்ச்சத்துக்கள் 12.5 கிராம், மாங்கனீசு 74 சதவீதம், ஃபோலேட் 71 சதவீதம், காப்பர் 64 சதவீதம், இரும்புச்சத்து 26 சதவீதம், சிங்க் சத்து 23 சதவீதம், பாஸ்பரஸ் 22 சதவீதம், மெக்னீசியம் 19 சதவீதம், தியாமைன் 16 சதவீதம், வைட்டமின் பி6 13 சதவீதம், செலினியம் 11 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 10 சதவீதம் நிறைந்துள்ளது.
வயிறு நிறைந்த உணர்வை தரும்
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுக்குள் வைக்கிறது. தாமதமாக செரிப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, பசியை குறைக்கும் ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வது தடுக்கப்படுகிறது.
தாவர புரதம் நிறைந்தது
கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இறைச்சி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த உணவு. புரதச்சத்து எடை மேலாண்மை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசையை வலுப்படுத்த உதவுகிறது. கொண்டைக்கடலையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களில் உள்ள புரதத்தைவிட சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது
இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் என்பதால், இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுப்படுத்தி நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வதை தடுக்கிறது.
டாபிக்ஸ்