சன்னா மசாலா : ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா; வீட்டிலே செய்யலாமா? இதோ எப்படி செய்வது என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சன்னா மசாலா : ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா; வீட்டிலே செய்யலாமா? இதோ எப்படி செய்வது என்று பாருங்கள்!

சன்னா மசாலா : ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா; வீட்டிலே செய்யலாமா? இதோ எப்படி செய்வது என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 11, 2025 02:35 PM IST

சன்னா மசாலா : தக்காளி, வெங்காயத்தை சேர்த்து மசாலாவை அரைத்துக்கொள்ளலாம். அப்படி மசாலா அரைத்து செய்யும்போது கூடுதல் சுவையானதாக இருக்கும்.

சன்னா மசாலா : ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா; வீட்டிலே செய்யலாமா? இதோ எப்படி செய்வது என்று பாருங்கள்!
சன்னா மசாலா : ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா; வீட்டிலே செய்யலாமா? இதோ எப்படி செய்வது என்று பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• கொண்டைக்கடலை – ஒரு கப்

(8 மணி நேரம் அல்லது ஓரிரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை ஒரு குக்கரில் சேர்த்து உப்பு போட்டு, 5 விசில் விட்டுக்கொள்ளவேண்டும்)

• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• பட்டை – 1

• கிராம்பு – 2

• ஸ்டார் சோம்பு – 1

• கல்பாசி – கால் ஸ்பூன்

• ஏலக்காய் – 1

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• சோம்பு – ஒரு ஸ்பூன்

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• முந்திரி – 8

• தக்காளி – 1

• பிரியாணி இலை – 1

• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்

• மல்லித் தூள் – கால் ஸ்பூன்

• கரம் மசாலா – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• நெய் – 2 ஸ்பூன்

• கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்

• கீறிய பச்சை மிளகாய் – 2

செய்முறை

1. ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, கல்பாசி, ஏலக்காய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும்.

2. அடுத்து பெரிய வெங்காயம், முந்திரி, தக்காளி என சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வதக்கியவற்றை ஆறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

3. அடுத்து ஒரு கடாயில் எஞ்சிய எண்ணெயை சேர்த்து அது சூடானவுடன் பிரியாணி இலையை சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து இஞ்சி – பூண்டு சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

4. அது வதங்கியவுடன், அரைத்த விழுதை சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

5. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது, கொண்டைக்கடலை சேர்த்து கலந்துவிடவேண்டும்.

6. அடுத்து நெய் சேர்த்து கலந்துவிட்டு, கசூரி மேத்தி சேர்த்து, கீறிய பச்சை மிளகாய்களை சேர்த்து அலங்கரித்து இறக்கினால் சூப்பர் சுவையான சன்னா மசாலா வித்யாசமான சுவையில் தயார்.

இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். வழக்கமான தேங்காய் மசாலா ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு இது மிகவும் நல்லது.