Channa Masala : பன்னீர் பட்டர் மசாலா சுவையில் சன்னா மசாலா; சப்பாத்தி, பூரிக்கு நல்ல சாய்ஸ்!
Channa Masala : பன்னீர் பட்டர் மசாலா சுவையில் சன்னா மசாலா; சப்பாத்தி, பூரிக்கு நல்ல சாய்ஸ்!
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை – 200 கிராம்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் – 10
இஞ்சி – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய – 1 (கீறியது)
மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
உலர்ந்த மாங்காய்த்தூள் – கால் ஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகப்பொடி – கால் ஸ்பூன்
கரம்மசாலாதூள் – ஒரு ஸ்பூன்
வெல்லம் – சிறிதளவு
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 3
கொத்தமல்லி தழை – கைப்பிடியளவு
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கொண்டைக்கடலையை கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் தேவையான அளவு தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து 10 விசில் வரும் வரை பூவாக வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கவேண்டும். பின் அடுப்பை அணைத்து ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் மிக்ஸியில் நைஸாக அரைக்கவேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.
கடாயில் எஞ்சியுள்ள எண்ணெய் விட்டு சூடானதும், அதில் பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, கீறிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கருக விடாமல் வேகமாக கிளறவேண்டும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவேண்டும். அவை வதங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கரம் மசாலா தூள், வறுத்து பொடித்த சீரகப்பொடி மற்றும் உலர்ந்த மாங்காய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
பின் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவேண்டும்.
பின் வெல்லம் மற்றும் வெண்ணெய் சேர்த்து மேலும் 7 நிமிடங்கள் எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவேண்டும்.
இதற்கு தேவையான பொடிகளை வீட்டிலே தயாரித்தால் சுவை அள்ளும்.
நன்றி – விருந்தோம்பல்.
கொண்டைக்கடலையில் உள்ள சத்துக்களும், நன்மைகளும்
ஒரு கப் கொண்டைகடலையில் 269 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 14.5 கிராம், கொழுப்பு 4 கிராம், கார்போஹைட்ரேட் 45 கிராம், நார்ச்சத்துக்கள் 12.5 கிராம், மாங்கனீசு 74 சதவீதம், ஃபோலேட் 71 சதவீதம், காப்பர் 64 சதவீதம், இரும்புச்சத்து 26 சதவீதம், சிங்க் சத்து 23 சதவீதம், பாஸ்பரஸ் 22 சதவீதம், மெக்னீசியம் 19 சதவீதம், தியாமைன் 16 சதவீதம், வைட்டமின் பி6 13 சதவீதம், செலினியம் 11 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 10 சதவீதம் நிறைந்துள்ளது.
வயிறு நிறைந்த உணர்வை தரும்
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுக்குள் வைக்கிறது. தாமதமாக செரிப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, பசியை குறைக்கும் ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வது தடுக்கப்படுகிறது.
தாவர புரதம் நிறைந்தது
கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இறைச்சி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த உணவு. புரதச்சத்து எடை மேலாண்மை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசையை வலுப்படுத்த உதவுகிறது. கொண்டைக்கடலையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களில் உள்ள புரதத்தைவிட சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது
இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் என்பதால், இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுப்படுத்தி நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வதை தடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்