சன்னா மோர்க்குழம்பு : வழக்கமான காய்கறிகள் அல்லாமல் கொண்டைக்கடலையில் செய்யலாம் மோர் குழம்பு! இதோ ரெசிபி!
சன்னா மோர்க்குழம்பு : வெண்டைக்காய், பூசணிக்காய் அல்லாமல் கொண்டைக்கடலையில் மோர்க்குழம்பு செய்ய முடியும். அது எப்படி என்று பாருங்கள்.

பொதுவாக வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பூசணிக்காய் அல்லது வடை போன்றவற்றை வைத்துதான் மோர் குழம்பு செய்வார்கள். ஆனால் அந்த மோர் குழம்பை நீங்கள் கொண்டைக்கடலையில் கூட வைத்து செய்யமுடியும். அதை செய்வது எப்படி என்று பாருங்கள். பொதுவாக குழந்தைகள் மோர் குழம்பு போன்ற குழம்பு வகைகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களும் இந்த கொண்டைக்கடலை மோர் குழம்பை சாப்பிடுவார்கள். ஏனெனில் குழந்தைகளுக்கு மிகவும் கொண்டைக்கடலை பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
• கொண்டைக்கடலை – ஒரு கப்
(8 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்தது)
• தயிர் – ஒரு கப் (அடித்து வைத்துக்கொள்ளவேண்டும்)
தாளிக்க தேவையான பொருட்கள்
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• வெந்தயம் – கால் ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
அரைக்க தேவையான பொருட்கள்
• தேங்காய்த் துருவல் – ஒரு கப்
• சீரகம் – ஒரு ஸ்பூன்
• பச்சை மிளகாய் – 2
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• பூண்டு – 4 பல்
செய்முறை
2. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் என அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவேண்டும்.
3. அடுத்து கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
5. அது கொதித்து வந்தவுடன் கொண்டைக்கடலையை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, பச்சை வாசம் போய், எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் கொதிக்கவிட்டு இறக்கிவிடவேண்டும். இறக்கியவுடன் அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து கலக்கவேண்டும். தயிரை சேர்து கொதிக்கவிடக்கூடாது. தயிரை கலந்தபின் அந்த சூட்டிலே வெந்து வித்யாசமான சுவையைத் தரும்.
இந்த வித்யாசமான கொண்டடைக்கடலை மோர் குழம்பை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைக்கத்தூண்டும் இந்தக் குழம்பை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்