Channa Biriyani : சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சன்னா பிரியாணி! குழந்தைகளின் முதல் சாய்ஸ்! இதோ ரெசிபி!
Channa Biriyani : இதயத்துக்கு போதுமான அளவு ஊட்டச்சத்தை வழங்குகிறது. பொட்டாசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு ஆகிய சத்துக்களை வழங்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவு நோய்க்கும் சிறந்தது. மனித உடலில் எலும்பு வலுப்பெற உதவுகிறது. ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
கொண்டைக்கடலை, சன்னாவில் நிறைய உணவு வகைகள் செய்யலாம். வெள்ளை கொண்டைக்கடலை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. கருப்பு கொண்டைக்கடலையும் உள்ளது. அனைத்து கொண்டை கடலையுமே உடலுக்கு சக்தியை அளிப்பது. இதை வைத்து சாலட், கிரேவிகள், சாட் என எதை வேண்டுமானாலும் செய்யலாம். சன்னா மசாலா, கேரளா கடல கறி ஆகியவை கொண்டைக்கடலையில் செய்யப்படும் பிரபல உணவு வகைகள் ஆகும். உலகில் பல்வேறு நாடுகளில் கொண்டைகக்டலைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கொண்டைக்கடலையை ஒரு இரவு ஊறவைத்துதான் எந்த உணவும் செய்ய முடியும்.
கொண்டைக்கடலையில் பயன்கள்
கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளது. உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. இறைச்சிக்கு அருமையான மாற்றாக உள்ளது. உடலின் புரத தேவையில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது. உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்தை அளித்து உயர் ரத்த அழுத்தம் வராமல் காக்கிறது. இதயத்துக்கு போதுமான அளவு ஊட்டச்சத்தை வழங்குகிறது. பொட்டாசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு ஆகிய சத்துக்களை வழங்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவு நோய்க்கும் சிறந்தது. மனித உடலில் எலும்பு வலுப்பெற உதவுகிறது. ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
சன்னா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப்
சன்னா (கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக்கடலை) – அரை கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1
பூண்டு – 5 பல்
தக்காளி – 2 (மசித்தது)
எண்ணெய் அல்லது நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – பட்டை – 1, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, சோம்பு – 1 ஸ்பூன்
புதினா இலைகள் – அரை கப்
கொத்தமல்லி இழைகள் – அரை கப்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கழுவி சுத்தம் செய்த சன்னாவை ஒரு இரவு அல்லது 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பாஸ்மதி அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதற்குள் மற்ற பொருட்களை நீங்கள தயார் செய்து விட வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா மற்றும் கரம் மசாலா என அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் நெயை சூடாக்கிக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதை அதில் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் பிரியாணி மசாலாவை சேர்த்து நன்றாக ஓரிரு நிமிடங்கள் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக தக்காளியை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். பிரியாணியின் சுவையை மேலும் அதிகரிக்க முக்கால் கப் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவேண்டும்.
கொண்டைகடலை, உப்பு தேவையான அளவு, எலுமிச்சை சாறு, மல்லித்தழை ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அரிசியை கழுவி கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.
இப்போது குக்கரை மூடி நெருப்பை குறைக்க வேண்டும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து அடுப்பை அனைத்துவிடவேண்டும்.
சன்னா பிரியாணி தயாரானவுடன் நன்றாக கிளவிட்ட நெய் ஊற்றி பரிமாற வேண்டும்.
இதற்கு தயிர் பச்சடி அல்லது எண்ணெய் கத்தரிக்காய் பெஸ்ட் காம்போவாக இருக்கும் அல்லது மல்டி வெஜ், சோயா, முட்டை கிரேவியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
டாபிக்ஸ்