Cervical Cancer: பெண்களை அதிகம் தாக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் - காரணங்கள், அறிகுறிகள், உதவிக்குறிப்புகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cervical Cancer: பெண்களை அதிகம் தாக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் - காரணங்கள், அறிகுறிகள், உதவிக்குறிப்புகள்

Cervical Cancer: பெண்களை அதிகம் தாக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் - காரணங்கள், அறிகுறிகள், உதவிக்குறிப்புகள்

Marimuthu M HT Tamil
Feb 03, 2024 08:49 PM IST

இந்தியாவில் பெண்கள் புற்றுநோயால் இறப்பதற்கான இரண்டாவது காரணமாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கருதப்படுகிறது. 95% அதிகமான பெண்களுக்கு கர்ப்பப்பை வாயில் பிரச்னை இருக்கிறது. எனவே, கர்ப்பப்பை புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்புகள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு குறிப்புகள் மற்றும் HPV தொற்று பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு குறிப்புகள் மற்றும் HPV தொற்று பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை (Photo by Shutterstock)

மனித பாப்பிலோமாவைரஸ், பொதுவாக எச்.பி.வி(Human papillomavirus infection) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பெண்கள் புற்றுநோயால் இறப்பதற்கான இரண்டாவது காரணமாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கருதப்படுகிறது. 95% அதிகமான பெண்களுக்கு கர்ப்பப்பை வாயில் பிரச்னை இருக்கிறது. 

பெண் இனப்பெருக்க உடற்கூறியலில் கருப்பை வாயில், வழக்கமாக செய்யும் டெஸ்ட்கள் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினை அறிந்துகொள்ளலாம். 

மணிப்பால் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் தர்மா குமார் அளித்த பேட்டியில், "கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினை வழக்கமான ஸ்கிரினிங் டெஸ்ட்கள் மூலம் முன்கூட்டியே கண்டறியமுடியும். தடுப்பூசிகள் இல்லாத பிற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க ஒரு தடுப்பூசி உள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்புக்கான முக்கிய அம்சங்கள்:-

- பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே உடலுறவில் ஈடுபடுவது, பல பாலியல் கூட்டாளர்களைக் கொண்டவர்கள் அல்லது HPV நோய்த்தொற்றுடன் இருக்கும் ஒரு நபருடன் உடலுறவில் ஈடுபட்டவர்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

- நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பவர்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பப்பை வாயின் அருகே கருத்தடை செய்தவர்களுக்குப் பரவுகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் உடனடி மருத்துவ உதவியை நாடுதல்:-

- பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்தப்போக்கு அசாதாரணமாக வெளியேறுவது மற்றும் முதுகுக்குக் கீழான வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம். 

வழக்கமான பரிசோதனை:

  • ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை உடல் உறவில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள் ஒரு விரிவான பரிசோதனையை செயல்முறைப் படுத்தலாம். 30வயதுக்குப் பிறகு, HPV DNA சோதனையையும் செய்துகொள்ளலாம்.
  • நிலையான பரிந்துரைகளின்படி தடுப்பூசி: சிறு வயதில் (9 முதல் 13 வயது வரை) அல்லது பாலியல் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு, தடுப்பூசி போடுவது சிறந்தது. கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்க இரண்டு அல்லது மூன்று முறை சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம்.

 டெல்லியில் உள்ள யுனிக் மருத்துவமனை புற்றுநோய் மையத்தின் தலைமை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குப்தா அளித்துள்ள விரிவான தகவல்கள்:-

  • மனித பாப்பிலோமாவைரஸ்(HPV) ஒரு பொதுவான பாலியல் தொற்று ஆகும். இது பல்வேறு துணை வகைகளை உள்ளடக்கியது. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் பாதிப்பில்லாதவை. ஆனால் அவற்றுள், சில கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
  • பரவுதல் மற்றும் ஆபத்து காரணிகள்: HPV எனும் மனித பாப்பிலோமா வைரஸ், முதன்மையாக பாலியல் உடல் உறவு மூலம் பரவுகிறது. மோசமான பெண் பிறப்புறுப்பு சுகாதாரம், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள பெண்களின் உடல்நிலை மற்றும் பல பாலியல் கூட்டாளர்களுடன் உடலுறவில் ஈடுபடுவது போன்ற ஆபத்து காரணிகள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உண்டாக்கும்.
  • பொதுவான அறிகுறிகள்: பெரும்பாலான HPV நோய்த்தொற்றுகள் அறிகுறியற்றவை. இதனால் இவற்றைக் கண்டறிவது கடினம். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் பெண்களின் பிறப்புறுப்பில் மருக்கள் உண்டாகலாம். இதனை ஆரம்பகாலத்திலேயே அடையாளம் கண்டுகொள்ள வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
  • சுகாதார தாக்கங்கள்: பெரும்பாலான HPV நோய்த்தொற்றுகள் தாங்களாகவே அழிக்கப்பட்டாலும், தொடர்ச்சியான நோய்த்தொற்றுகள் இருந்தால் பல்வேறு புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் நின்றுவிடாது. தலை மற்றும் கழுத்து பகுதியில் தோன்றும் புற்றுநோய்கள், ஆண்குறி புற்றுநோய், பெண்களின் பிறப்புறுப்பான யோனி புற்றுநோய் ஆகியவையும் இவற்றுள் அடங்கும். HPV தொடர்பான நோய்களை ஆரம்பத்திலேயே தடுக்கப் பழகவேண்டும். 
  • தடுப்பு மற்றும் ஆரம்பகால கண்டறிதல்: HPV தடுப்பூசி மூலம் HPV தொற்றைத் தடுக்கலாம். இந்த தடுப்பூசி ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். இது அதிக ஆபத்துள்ள வைரஸ் துணை வகைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. எந்தவொரு பாலியல் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. HPV டி.என்.ஏ சோதனை மூலம் அதிக ஆபத்துள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை  நாம் கண்டறிய முடியும்.
  • HPV தடுப்பூசி - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான கவசம்: HPV தடுப்பூசியானது 9-14 வயதிற்குள் வழங்கப்படுகிறது. இது 26 வயது வரை கொடுக்கப்படலாம். இது வயதைப் பொறுத்து 2 அல்லது 3 அளவுகளில் வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; பயனுள்ளது மற்றும் HPV தொடர்பான புற்றுநோய்களைத் தடுப்பதற்கான செயலின் முக்கிய படியாகும். இது ஆண், பெண் இருவருக்கும் கொடுக்கப்படலாம். சரியான நேரத்தில் தடுப்பூசி HPV தொற்று மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முன்னேற்றம் ஆகிய இரண்டையும் தடுப்பதில் ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த தடுப்பூசி இப்போது இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியுட்டில் தயாரிக்கப்படுகிறது.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க செய்யவேண்டியது என்ன? HPV வைரஸைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்படலாம். விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லாத ஆரோக்கியமான எதிர்காலத்தை நாம் உருவாக்கலாம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.