Tungsten: தமிழகத்தில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம வள சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு; முக்கிய அம்சங்கள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tungsten: தமிழகத்தில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம வள சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு; முக்கிய அம்சங்கள்

Tungsten: தமிழகத்தில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம வள சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு; முக்கிய அம்சங்கள்

Marimuthu M HT Tamil
Jan 23, 2025 10:06 PM IST

Tungsten: தமிழகத்தில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம வள சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு; முக்கிய அம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.

Tungsten: தமிழகத்தில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம வள சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு; முக்கிய அம்சங்கள்
Tungsten: தமிழகத்தில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம வள சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு; முக்கிய அம்சங்கள்

தமிழகத்தின் மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பல்லுயிர் பெருக்கத்தளம் மற்றும் பல கலாசார பாரம்பரிய தளங்களின் டங்ஸ்டன் கனிம வள ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த டங்ஸ்டன் எதிர்ப்புக்குழு பிரதிநிதிகள், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியை சந்தித்து தங்கள் பகுதியில் வரும் டங்ஸ்டன் கனிம வள ஏலத்தை ரத்து செய்யுமாறு ஜனவரி 22ஆம் தேதி நேரில் பார்த்து வலியுறுத்தினர். இந்நிலையில் தான், டங்ஸ்டன் கனிம வள ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது, மத்திய அரசு. 

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 22, 2025அன்று நடந்த கூட்டத்தின்போது, மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டியில் அமையவிருந்த டங்ஸ்டன் கனிம வள ஏலத்தை ரத்து செய்யுமாறு ஊர்த்தலைவர்களான அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். 

டங்ஸ்டன் எதிர்ப்புக்குழு பிரதிநிதிகளிடம் கேட்ட மத்திய அமைச்சர்:

டங்ஸ்டன் எதிர்ப்புக்குழு பிரதிநிதிகளின் கருத்துக்களை பொறுமையாக கேட்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்பை மத்திய அரசு முழுமையாக ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.

விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இப்பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம வள ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, டங்ஸ்டன் ஒரு முக்கியமான மற்றும் மூலோபாய கனிமமாகும். ஏறத்தாழ, 20.16 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இந்த சுரங்கம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது. இந்த நாயக்கர்பட்டி பகுதி ஏலத்திற்கு விடப்படுவதற்கு முன்பு தமிழக அரசிடமிருந்து இதுகுறித்து உள்ளீடுகள் பெறப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

பல்லுயிர் பாரம்பரிய தளம் மற்றும் மக்களின் எதிர்ப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு அங்கு சுரங்கங்களை தனது அரசு அனுமதிக்காது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.

மேலும் இதுதொடர்பான, நில அட்டவணை விவரங்கள் கிடைக்கவில்லை என்று மாநில அரசு தெரிவித்திருந்தது.

வேதாந்தா குழுவின் செயல்பாடு:

மேலூர் தாலுகா, அரிட்டாபட்டி கிராமத்தில் 47.37 ஹெக்டேர் கிரானைட் குவாரி குத்தகை ஆனது, தமிழக அரசு நிறுவனமான டாமின் நிறுவனத்திற்கு செப்டம்பர் 19, 2008அன்று 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வேதாந்தா குழும நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, டங்ஸ்டன் கனிம வளப்பகுதியான அரிட்டாபட்டி மற்றும் நாயக்கர்பட்டியை உள்ளடக்கிய பகுதியினை, ஏலத்தில் எடுக்க விருப்பமான ஏலதாரராக உருவெடுத்தது. இந்நிலையில் இந்த ஏலம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த அரிட்டாபட்டி பகுதி டங்ஸ்டன் கனிமம் எடுக்க முதன்முதலில் ஏலத்திற்கு விடப்பட்டதிலிருந்து, முடிவு அறிவிக்கப்படும் வரை, "ஏலத்திற்கு எந்தவொரு எதிர்ப்பும் மாநில அரசு உட்பட எந்த தரப்பிலிருந்தும் எந்த தகவலும் இல்லை. ஏலத்தில் இருந்து தடையை நீக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசும் கோரவில்லை" என்று மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.