World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!

World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!

Kathiravan V HT Tamil
Dec 21, 2024 06:30 AM IST

World Saree Day: புடவையின் வரலாறு சிந்து நாகரிகத்திற்கு முந்தையது என்று கூறப்படுகிறது. அதாவது கிமு 2,800 முதல் 1800 வரையிலான வரலாற்றைக் கொண்டது சேலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.

World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!
World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!

உலக சேலை தினத்தின் வரலாறு

சிந்தூர கவிதி மற்றும் நிஸ்துலா ஹெப்பர் ஆகியோர் சேலை தின கொண்டாட்டத்திற்கு முன்னெடுப்புகளை எடுத்தனர். இந்த செயல்பாடுகள் அது விரைவில் தேசிய அங்கீகாரம் பெற்றது. 2009ஆம் ஆண்டு நளினி சேகர் புடவைகளுக்கு புத்துயிர் அளிக்கவும், புடவையின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் விரும்பி இந்த தின கொண்டாட்டத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் 2020 ஆண்டு தொடங்கி இந்த தினம் இணைய தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. 

புடவையின் வரலாறு 

புடவையின் வரலாறு சிந்து நாகரிகத்திற்கு முந்தையது என்று கூறப்படுகிறது. அதாவது கிமு 2,800 முதல் 1800 வரையிலான வரலாற்றைக் கொண்டது சேலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் புடவைகளின் பயன்பாடு உள்ளது. 

இந்தியாவில் பிரபலமான புடவைகள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள்

காஞ்சிபுரம் சேலை (தமிழ்நாடு)

"பட்டுகளின் ராணி" என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் புடவைகள் அவற்றின் நீடித்த தன்மை, துடிப்பான வண்ணங்கள் மற்றும் தூய மல்பெரி பட்டு மற்றும் தங்க ஜரிகை நூல்களால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுக்காக புகழ் பெற்று விளங்குகின்றது.

பனாரசி புடவை (உத்தரப்பிரதேசம்)

வாரணாசியில் தயாராகும் பனாரஸ் சேலைகள் பூக்கள், இலைகள் உள்ளிட்ட வேலைப்பாடுகள் நிறைந்த டிசைன்களுக்கு புகழ்பெற்றவை. சிக்கலான ப்ரோகேட் வடிவங்களுக்காக இவை புகழ்பெற்று விளங்குகின்றது. 

படோலா புடவை (குஜராத்)

இந்த இரட்டை இகாட் புடவைகள் அவற்றின் சிக்கலான நெசவு நுட்பம் மற்றும் தெளிவான வடிவியல் வடிவங்களுக்காக புகழ் பெற்று விளங்குகின்றன. 

சாந்தேரி புடவை (மத்தியப் பிரதேசம்)

இலகுரக மற்றும் நேர்த்தியான, சாந்தேரி புடவைகள் அதன் மயில்கள், நாணயங்கள் போன்ற பாரம்பரிய வடிவங்களால் புகழ்பெற்றவை. பட்டு மற்றும் பருத்தி ஆகிய நூல்களிலும் இங்கு புடவைகள் நெய்யப்படுகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.