Cauliflower Side Effects: காலி பிளவர் அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தா? உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால் கஷ்டம்தா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cauliflower Side Effects: காலி பிளவர் அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தா? உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால் கஷ்டம்தா!

Cauliflower Side Effects: காலி பிளவர் அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தா? உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால் கஷ்டம்தா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 26, 2024 02:01 PM IST

Cauliflower: சில வகையான பிரச்சனைகள் இருப்பவர்கள் காலிஃபிளவரை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். காலிஃபிளவரை யார் சாப்பிடக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

காலி பிளவர் அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தா!
காலி பிளவர் அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தா!

ஆனால் சில வகையான பிரச்சனைகள் இருப்பவர்கள் காலிஃபிளவரை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். காலிஃபிளவரை யார் சாப்பிடக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

காலிஃபிளவர் யார் சாப்பிடக்கூடாது?

காலிஃபிளவரை அளவாக சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் வராது. அதிகமாக சாப்பிட்டால் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் வரும். மேலும் செரிமான பிரச்சனைகள் தொடங்கலாம். வயிற்றில் வாயு உற்பத்தி, செரிமான பிரச்சனைகள், வயிற்றுவலி... போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் காலிஃப்ளவரை தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் காலிஃப்ளவரில் செய்த உணவுகளை சாப்பிட்டால், அந்த பிரச்சனைகள் அதிகரிக்கும்.

சிலருக்கு காலிஃபிளவர் சாப்பிட்ட பிறகு வயிற்றெரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. காலிஃபிளவரில் உள்ள கந்தக கலவைகள் வயிற்றில் நுழையும் போது சிலருக்கு வாயு உற்பத்தியை ஏற்படுத்துகிறது. அது ஒவ்வாமையாக மாறும் தன்மை உண்டாகிறது.

 அதனால்தான் சிலருக்கு காலிபிளவர் சாப்பிட்ட உடன் வயிறு வீங்குகிறது. உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் காலிஃபிளவரை தவிர்ப்பது நல்லது. மேலும் தைராய்டு பிரச்சனையால் அவதிப்டும் நபர்கள் காலிஃபிளவரை குறைவாக சாப்பிட வேண்டும்.  காலிபிளவர் அதிகமாக சாப்பிடும் சூழலில் தைராய்டு சுரப்பி சரியாக ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. அதன் செயல்பாட்டில் குறுக்கிட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்கள் காலிபிளவர் அதிகம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. 

தைராய்டு பிரச்சனைகளில் ஒன்று ஹைப்போ தைராய்டிசம். குறிப்பாக இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் காலிஃபிளவரை தவிர்க்க வேண்டும். சிலருக்கு விரைவில் ஒவ்வாமை ஏற்படும். அத்தகையவர்களும் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது. ஏனெனில் காலிஃபிளவர் சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் வெடிப்பு ஏற்படும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்களுக்கு அலர்ஜி இருந்தால் காலிஃபிளவர் சாப்பிட வேண்டாம்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காலிஃபிளவர் அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் காலிஃபிளவரில் உள்ள கந்தகம் பால் மூலம் குழந்தைக்கு சென்றடைகிறது. அந்த குழந்தைகளுக்கு வாய்வு, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே பால் ஊட்டும் தாய்மார்கள் காலிபிளவரை தவிர்த்து விடுவது நல்லது. 

நன்மைகள்

அதேசமயம் காலிபிளவர் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உள்ளன. வைட்டமின் ஏ, பி, இ, கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.

காலிபிளவர் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது.

புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதுபோன்ற ஏராளமான நன்மைகள் இருந்தால் ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.