Cauliflower Rice : துளி கூட மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸ் காலியாக வேண்டுமா? சூப்பரான ரெசிபி! காலிஃபிளவர் சாதம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cauliflower Rice : துளி கூட மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸ் காலியாக வேண்டுமா? சூப்பரான ரெசிபி! காலிஃபிளவர் சாதம்!

Cauliflower Rice : துளி கூட மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸ் காலியாக வேண்டுமா? சூப்பரான ரெசிபி! காலிஃபிளவர் சாதம்!

Priyadarshini R HT Tamil
Published Jul 05, 2024 11:27 AM IST

Cauliflower Rice : துளி கூட மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸ் காலியாக வேண்டுமெனில் அனைவருக்கும் பிடித்த சூப்பரான ரெசிபி. காலிஃபிளவர் சாதத்தை கட்டிக்கொடுத்து பாருங்கள்.

Cauliflower Rice : துளி கூட மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸ் காலியாக வேண்டுமா? சூப்பரான ரெசிபி! காலிஃபிளவர் சாதம்!
Cauliflower Rice : துளி கூட மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸ் காலியாக வேண்டுமா? சூப்பரான ரெசிபி! காலிஃபிளவர் சாதம்!

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சோம்பு – கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம்- நீள வாக்கில் மெலிதாக நறுக்கியது

பச்சை மிளகாய் – 2

மிளகாய் தூள் – கால் ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

காலி ஃப்ளவர் – 1

தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

வேகவைத்த சாதம் – ஒரு கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை - சிறிதளவு

செய்முறை

முதலில் காலிஃப்ளவரை சிறுதுண்டுகளாக்கி தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும். காலிஃப்ளவர் பாதிப்பதம் வெந்தவுடன் அதை எடுத்துவிடவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலா என அனைத்தும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து மிளகுத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவேண்டும். கடைசியாக காலிஃப்ளவர் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளவேண்டும். பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக பிரட்டி எடுத்தால் சூப்பர் சுவையில் காளிஃப்ளவர் சாதம் தயார்.

உருளைக்கிழங்குக்கு அடுத்ததாக அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது காலிஃப்ளவர் தான். இதில் 65, ஃப்ரை என பல உணவுகளையும் செய்து சாப்பிடுகிறார்கள்.

சூப்பர் சுவை நிறைந்ததாக இந்த காலிஃப்ளவர் இருப்பதால் குழந்தைகள் விரும்பும் ஒன்றாக காலிஃப்ளவர் உள்ளது. எனவே அதில் இதுபோல் சாம் செய்து லன்ச் பாக்ஸில் வைத்துவிட்டால் அது உடனடியாக காலியாகிவிடும்.

எனவே கட்டாயம் இந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியை முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

காலிஃப்ளவரின் நன்மைகள்

கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் 5 கிராம் மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. 30 கலோரிகள் மட்டுமே கொண்டது. கர்போஹைட்ரேட் குறைவான உணவு உட்கொள்ளவேண்டும் என்று எண்ணுபவர்கள் இதை எடுத்துக்கொள்வது நல்லது. காலிஃப்ளவரில் வயோதிகத்தை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான தன்மைகள் உள்ளது.

ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நாள்பட்ட வியாதிகளின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.

கார்போஹைட்ரேட் குறைந்த உணவு.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

வயோதிகத்தை தாமதப்படுத்தும்.

வீக்கத்தை குறைக்கிறது.

உங்கள் உடல் இயற்கை முறையில் கழிவு நீக்கம் செய்ய உதவுகிறது.

ஒரு கப் காலிஃப்ளவரில், கலோரிகள் 26.8, கொழுப்பு 0.3 கிராம், சோடியம் 32.1 மில்லிகிராம், கார்போஹைட்ரேட்கள் 5.32 கிராம், நார்ச்சத்துக்கள் 2.14 கிராம், புரதச்சத்துக்கள் 2.05 கிராம், சர்க்கரை 0 கிராம் உள்ளது.

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

காலிஃப்ளவர் வாயுவை உற்பத்தி செய்யக்கூடியது. செரிமான கோளாறுகள் உள்ளவர் அளவாக மட்டுமே காளிஃப்ளவரை எடுத்துக்கொள்ளவேண்டும். வயிறு எரிச்சல் கொண்டவர்கள் காளிஃபிளவரை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது அவர்களுக்க வலி, உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் வாயுத்தொல்லை ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது.

சாப்பிடும் விதங்கள்

இதை ஓட்சுடன் சேர்த்து சாப்பிடும்போது உங்களுக்கு உடலுக்கு கூடுதல் நார்ச்சத்துக்கள் கிடைக்கும். வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம். கேக், பிரவுனி, புட்டிங்குகளிலும் நீங்கள் காலிஃப்ளவரை சேர்த்துக்கொள்ளலாம். இதை அவகேடோவுடன் சாப்பிடும்போது சுவை கூடுதலாக இருக்கும். உருளைக்கிழங்கு சேர்க்கும் இடங்களில் காலிஃப்ளவரை சேர்ப்பது உணவின் கூடுதல் சுவைக்கு காரணமாகும்.

வெள்ளை காலிஃப்ளவரைத்தான் நாம் அதிகம் பார்த்துள்ளோம். ஆனால், இது பர்பிள், ஆரஞ்ச் மற்றும் பச்சை நிறங்களிலும் வருகிறது. வெள்ளை காலிஃப்ளவரைவிட வண்ண காலிஃப்ளவர்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.