Cauliflower Paratha : காலிஃபிளவர் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அதில் பராத்தா எப்படியிருக்கும்?
Cauliflower Paratha : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காளிஃபிளவர் பராத்தா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 3 கப்
உப்பு – தேவையான அளவு
ஓமம் – ஒரு ஸ்பூன்
காலிஃபிளவர் – 1 (துருவியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – ஒரு ஸ்பூன்
இஞ்சி – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு நறுக்கியது
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஓமம் சேர்த்து கலந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் துருவிய காலிஃபிளவர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்க்கவேண்டும்.
பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தயார் சேர்த்த மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின்னர் நன்கு ஆறவிடவேண்டும்.
பின்னர் மாவை சம உருண்டைகளாக உருட்டி கொள்ளவேண்டும்.
சப்பாத்தி கல்லில் மாவை தூவி அதில் உருட்டிய மாவை வைத்து தேய்த்து பின் தயார் செய்த மசாலாவை வைத்து மூடவேண்டும்.
பின்னர் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வேகவிடவேண்டும்.
இரு பக்கமும் வெந்ததும் பரிமாறவேண்டும்.
காலிஃபிளவர் பராத்தா தயார்.
இது மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும். வடஇந்திய முறையில் காளிப்ஃளவர் பராத்தா செய்யவேண்டும். இதற்கு கோதுமை மாவு மற்றும் காளிப்ஃளவர் இரண்டும் மிகவும் முக்கியமான பொருட்களாகும்.
காளிஃப்ளவரை வைத்து நிரப்புவதற்கு நாம் சில மசாலா பொருட்களை அதனுடன் சேர்க்க வேண்டும். அது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.
இது ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் செய்யக்கூடியது. காளிஃப்ளவர் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இதனால் இந்த பராத்தாவை பிடிக்காதவர்களும் இருக்க முடியாது.
இதை நீங்கள் வெறும் தயிர் அல்லது வெள்ளரி ரைத்தாவுடன் பரிமாற சுவை அள்ளும். இதற்கு வட இந்தியாவில் ஊறுகாய் கூட தொட்டுக்கொள்வார்கள்.
ஏனெனில் பராத்தாவிலே நாம் மசாலாக்களை சேர்த்துவிடுகிறோம். கட்டாயம் செய்து சுவைத்திடுங்கள்.
குறிப்பு
காளிஃப்ளவரை சுத்தம் செய்வது எப்படி?
காளிஃப்ளவரில் புழுக்கள் இருக்கும். அதனால் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து காளிஃப்ளவரை இதழ்களாக பிரித்து அதில் சேர்க்கவேண்டும்.
5 நிமிடங்கள் மூடிவைத்துவிட்டு, பின்னர் காளிஃப்ளவரின் இதழ்களை மட்டும் எடுக்கவேண்டும். பின்னர் அதை கேரட் துருவும் கட்டையில் வைத்து துருவவேண்டும். இதற்கு மட்டுமல்ல காளிஃப்ளவரை சமைக்கும்போது எப்போதும் இப்படித்தான் சுத்தம் செய்யவேண்டும்.
மற்ற டிஷ்களுக்கு துருவும் வேலை இருக்காது. ஆனால் பராத்தாவுக்கு துருவிக்கொள்ள வேண்டும். மற்ற டிஷ்களுக்கு தேவையான மாதிரி நறுக்கிக்கொள்ளவோ அல்லது அப்படியேவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
காளிஃப்ளவரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இதை சுத்தம் செய்வதற்கு மட்டும் கொஞ்சம் மெனக்கெடவேண்டும்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
டாபிக்ஸ்