இரும்பு பாத்திரங்கள் : இரும்பு பாத்திரத்தில் சமைக்கிறீர்களா? வார்ப்பு இரும்பு அல்லது சாதாரண இரும்பு வேறுபாடு என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இரும்பு பாத்திரங்கள் : இரும்பு பாத்திரத்தில் சமைக்கிறீர்களா? வார்ப்பு இரும்பு அல்லது சாதாரண இரும்பு வேறுபாடு என்ன?

இரும்பு பாத்திரங்கள் : இரும்பு பாத்திரத்தில் சமைக்கிறீர்களா? வார்ப்பு இரும்பு அல்லது சாதாரண இரும்பு வேறுபாடு என்ன?

Priyadarshini R HT Tamil
Published Mar 16, 2025 04:09 PM IST

இரும்பு பாத்திரங்கள் : இரும்பு பாத்திரம் என்றால் என்ன? Cast iron எனும் வார்ப்பு இரும்பு என்றால் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

இரும்பு பாத்திரங்கள் : இரும்பு பாத்திரத்தில் சமைக்கிறீர்களா? வார்ப்பு இரும்பு அல்லது சாதாரண இரும்பு வேறுபாடு என்ன?
இரும்பு பாத்திரங்கள் : இரும்பு பாத்திரத்தில் சமைக்கிறீர்களா? வார்ப்பு இரும்பு அல்லது சாதாரண இரும்பு வேறுபாடு என்ன? (meta AI )

இரும்பு பாத்திரம் வளையும் தன்மை கொண்டது. உடையாது. Cast iron உடையும் தன்மை கொண்டது.

துரு

இரும்பு பாத்திரத்தில் துரு அதிகம் பிடிக்கும். Cast iron பாத்திரத்தில் துரு கொஞ்சம் குறைவாகவே பிடிக்கும். ஆனால் இரண்டு பாத்திரங்களையும் நீங்கள் உபயோகப்படுத்திவிட்டு, பின்னர் சுத்தம் செய்து எண்ணெய் தடவி வைத்துவிட்டால் நீண்ட நாட்கள் வரும். எண்ணெய் தடவி வைக்கும்போது துரு வராமல் இருக்கும். மேலும் பாத்திரத்தில் உணவு ஒட்டும் தன்மையும் குறையும்.

சூடு பரவும் விதம்

இரும்பு பாத்திரம் தீ படும் இடத்தில் சூடு அதிகமாகவும், தீ படாத இடத்தில் சூடு குறைவாகவும் இருக்கும். இதனால் பாத்திரத்தில் சமைக்கப்படும் பொருட்கள் முழுவதும் ஒரே சீராக வேகாது. ஆனால், வார்ப்பு இரும்வு பாத்திரத்தில் எல்லா பாகத்திலும் சமமாகவே சூடேறும். ஒரு இடத்தில் உள்ள சூடு பாத்திரம் முழுவதுக்கும் சமமாக பரவும்.இதனால் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி சமைத்து வரும்.

இரும்பு பாத்திரத்தில் விரைவாக சூடு ஏறும். வேகமாக சூடு குறையும். வார்ப்பு இரும்பு பாத்திரத்தில் மெதுவாக சூடு ஏறும். மெதுவாகவே சூடும் குறையும்.

வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் நல்லதா?

சமையல் செய்வதற்கு இரும்பை விட சிறந்ததும் ஏற்றதும் வார்ப்பு இரும்பு பாத்திரங்கள்தான். தக்காளி, புளி போன்றவற்றை இரும்பு பாத்திரத்தில் நேரடியாக பயன்படுத்தி சமைக்கக்கூடாது. ஆனால் வார்ப்பு இரும்பு பாத்திரத்தில் இதை சேர்த்து சமைக்கலாம்.

இரும்பு பாத்திரங்கள் பளபளப்பாக மெல்லிசாக இருக்கும். வார்ப்பு இரும்பு பாத்திரங்களில், பாத்திரங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சிறு ஓட்டைகளும் லேசான சொரசொரப்புடனும், பளபளப்பு குறைவாகவும் இருக்கும். வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியதாகவும் இருக்கும்.

வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் சரியான விகிதாச்சாரப்படி உலோகங்கள் கலந்தால் எடை கூடுதலாக இருக்க வேண்டும். அவைதான் உண்மையான வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் ஆகும். இரும்பு பாத்திரம் சற்று எடை குறைவாகவே இருக்கும்.

வார்ப்பு இரும்பு பாத்திரங்களை வாங்குவது எப்படி?

வார்ப்பு இரும்பு பாத்திரங்களை வாங்கும்போது கவனம் தேவை. அது எடை அதிகமாக உள்ளதா என்பதை பரிசோதித்து வாங்கவேண்டும். அதுதான் உண்மையான சரியான கலவை உள்ள வார்ப்பு இரும்பு பாத்திரம் ஆகும்.

பணியாரக்கல், தோசைக்கல், சப்பாத்தி தவா, கடாய், டீப் பிரையிங் பேன், ஃபிஷ் பிரையிங் பேன், ஆப்பச்சட்டி போன்ற அனைத்துமே கூடுதல் எடையில் இருக்கும். ஒரு பணியாரக்கல்லே 3 கிலோவுக்குமேல் உங்களால் தூக்க முடியாத அளவுக்கு எடை கொண்டதாக இருக்கும்.

இதுபோன்ற தோசைக்கல், பணியாரக்கல்லில் தோசை அல்லது பணியாரம் செய்து சாப்பிட்டு பாரங்கள். அது தனிச் சுவை கொண்டதாக இருக்கும்.

எந்த சமையலுக்கு எந்த இரும்பு பாத்திரம்?

மெதுவாக சமைக்க, பேக் செய்ய, அனைத்து இடங்களிலும் சூடு பரவ வேண்டுமெனில் அதற்கு வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் உகந்தது, வறுக்க, பொரிக்க, கிரேவி என அனைத்துக்கும் ஏற்றது.

அன்றாட சமையலுக்கும், விரைந்து சமைக்கவும் சாதாரண இரும்பு பாத்திரங்கள் ஏற்றது.

இரும்போ அல்லது வார்ப்பு இரும்பு பாத்திரங்களோ வாங்கும்போது, நன்றாக விளக்கி சுத்தம் செய்துவிட்டு எண்ணெயை தடவி வைத்து பின்னர்தான் உபயோக்கிக்கவேண்டும்.

நீங்கள் எண்ணெய் பதார்த்தங்கள் செய்யும்போது, கூடுதலாக வழியும் எண்ணெயை இந்த பாத்திரத்தில் படும்படி பதார்த்தங்களை வைத்தால் இரும்பு பாத்திரங்கள், அடுத்து நீங்கள் சமைக்கும்போது உபயோக்க எளிமையாக இருக்கும்.