Cashew Gravy : ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பில் கிரேவி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டீங்க!
Cashew Gravy : இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பொதுவாக முந்திரியை நாம் இனிப்பு வகைகளில் அதிகம் பயன்படுத்துவோம். பின்னர் வெரைட்டி சாதங்களில் பயன்படுத்தி வந்தோம். இப்போது முந்திரியிலே தனியாக கிரேவியே செய்ய முடிகிறது. அது செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
முந்திரி பருப்பு - 75 கிராம்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி – ஒரு இன்ச்
பூண்டு – 6 பற்கள்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
முந்திரி மசாலா அல்லது கிரேவி செய்ய
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 200 கிராம்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
அரைத்த மசாலா விழுது அனைத்தும்
கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
சர்க்கரை – அரை ஸ்பூன்
கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு
செய்முறை -
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தக்காளி மற்றும் 6 பருப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவிடவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் எஞ்சிய முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின்னர் வேகவைத்த முந்திரி பருப்பு மற்றும் தக்காளியை தோல் நிக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்திக்கவிடவேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் மசாலாவை நன்றாக ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைக்கவேண்டும்.
அடுத்து கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவேண்டும்.
பிறகு அரைத்த மசாலா விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.
பின் கரம் மசாலா தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சர்க்கரை சேர்த்து கலந்துவிடவேண்டும்.
தண்ணீர் சேர்த்து கலந்து கடாயை மூடி 5 நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.
பின் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கலந்துவிடவேண்டும்.
முந்திரி பருப்பு கிரேவி அல்லது மசாலா தயார்.
இந்த கிரேவியை சப்பாத்தி, பூரி, நாண், ஃபுல்கா, குல்சா, ஸ்டஃப்ட் பராத்தா என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்