Carrot Cabbage Thovaran : கேரள ஸ்டைல் முட்டைக்கோஸ் கேரட் பீன்ஸ் தோரன்; சூப்பரான சுவைக்கு இப்டி செய்ங்க!
Carrot Cabbage Thivaran : இது அனைத்து வகை கலவை சாதம் மற்றும் மீல்ஸ்க்கும் சிறந்த சைட் டிஷ் ஆகும். மேலும் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் – 300 கிராம்
கேரட் – 1
பீன்ஸ் – 7
பச்சை பட்டாணி – கால் கப்
தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 3
பூண்டு – 1
சீரகம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முட்டைக்கோஸை நன்றாக கழுவி தண்டுகளை பிரித்து பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கேரட் மற்றும் பீன்ஸை கழுவி பொடியாக நறுக்கவேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவேண்டும்.
அவை வேகும்போது தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து விப்பர் அல்லது பல்ஸ் மோடில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். மசாலா கொரகொரப்பாக இருந்தால்தான் தொவரன் நன்றாக இருக்கும். எனவே நைசாக அரைக்கக்கூடாது.
காய்கறி பதமாக வெந்ததும் ஒரு அகலமான பேசினில் மாற்றிக்கொள்ளவேண்டும். பின் தண்ணீரை பிழிந்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவேண்டும். (பிழிந்த தண்ணீரை நீங்கள் செய்யும் குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம்).
பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்த முட்டைக்கோஸ் கேரட் கலவையை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவேண்டும்.
கடைசியாக சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவேண்டும். சுவையான கதம்ப பொரியல் தயாராக உள்ளது.
இது அனைத்து வகை கலவை சாதம் மற்றும் மீல்ஸ்க்கும் சிறந்த சைட் டிஷ் ஆகும். மேலும் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
காய்கறிகளை பதமாக சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவைத்து எடுக்கவேண்டும். காய்கறிகள் நிறம் மாறாமல், பார்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும். காய்கறிகளை அதிக நேரம் வேக வைத்தால் சுவை நன்றாக இருக்காது. முட்டைக்கோஸ் வாங்கும் போது கனமாக இருக்க வேண்டும்.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால், அது கண்களுக்கு நல்லது. வளரும் குழந்தைகளுக்கு கேரட் அடிக்கடி செய்துகொடுப்பது அல்லது அவர்களை பச்சையாக கேரட் சாப்பிட ஊக்குவிப்பது, அவர்களுக்கு கண் ஆரோக்கியம் சிறக்க உதவுகிறது. மேலும் முட்டைகோஸில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. எனவே, இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. எனவே இந்த தொவரனை அடிக்கடி செய்து அசத்துங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்