பராமரிப்பு குறிப்புகள் : கோடைக் கால பூச்சிகள்; வினிகரை வைத்து இதைச் செய்ங்க! வேறு எப்படி விரட்டலாம்? இதோ வழிகள்!
வீட்டு பராமரிப்பு குறிப்புகள் : கோடைக் காலத்தில் வீட்டில் அதிகரிக்கும் பழ ஈக்கள் மற்றும் பூச்சிகளை விரட்டும் வழிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள ஈக்களை விரட்டுவது எப்படி? கோடைக் காலம் அழகிய பூக்கள் மற்றும் புத்துணர்வு தரும் காற்றை மட்டும் கொண்டுவராது. அது பூச்சிகளையும், ஈக்களையும், கடும் கோடைக் காற்றையும், பழஈக்களையும் தான் கொண்டுவரும். குறிப்பாக கோடையில் வரும் மாம்பழத்தை தேடி வீட்டிற்கு அதிக ஈக்களும், பழ ஈக்களும் வரும். உங்கள் வீட்டில் பூச்சிகளும், ஈக்களும் வராமல் இருக்க நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
உணவுப்பொருட்களை மூடி வைக்கவேண்டும்
உங்கள் வீட்டில இருந்து பழ ஈக்களை விரட்டுவதற்கு சிறந்த வழி என்றால் அது உணவுப் பொருட்களை மூடி வைப்பதுதான். குறிப்பாக நீங்கள் சாப்பிடும் இடத்தில் உள்ள பழங்களை மூடி வைக்கவேண்டும். அது அதிகம் பழுத்துவிட்டால் உடனே பயன்படுத்திவிடவேண்டும். இல்லாவிட்டால் அது அழுகி நாற்றம் வீசும். அதற்கு ஈக்கள் பறந்து வரும். எனவே அவற்றை எத்தனை பாதுகாப்பாக மூடி வைக்க முடியுமோ அத்தனை பாதுகாப்பாக மூடி வைக்கவேண்டியது அவசியம்.
வினிகரை வைத்து பூச்சிகளுக்கான வலை
வீட்டில் உள்ள பழ ஈக்களை விரட்டியடிக்க வேண்டுமெனில், அதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய முறையை நீங்கள் கடைபிடிக்கண்டும். அதற்கு வினிகர் தேவை. ஒரு பவுலில் தண்ணீரை சேர்க்கவேண்டும். அதில் சூப்பிள் சைடர் வினிகரை கலக்க வேண்டும். பாத்திரம் தேய்க்கும் லிக்விடை சேர்த்து கரைத்த வீடு அல்லது சமையலறையில் ஓரிடத்தில் வைக்கவேண்டும். இந்த மணம் ஈக்களை கவர்ந்து இழுக்கும். ஈக்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கும்.