பராமரிப்பு குறிப்புகள் : கோடை காலத்தில் வீட்டில் பல்லி மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி? இதோ குறிப்புகள்!
வீட்டு பராமரிப்பு குறிப்புகள் : கோடை காலத்தில் வீட்டில் பல்லிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று பாருங்கள்.

உங்கள் வீடுகளை பூச்சிகள் இல்லாமல் வைப்பது எப்படி?
கோடையில் வறண்ட காற்று, வறட்சி மற்றும் சில கோடைகக் கால மலர்களை மட்டும் கொண்டு வருவதில்லை. கோடைக்காலம் பல பூச்சிகளையும், பல்லி மற்றும் விஷ ஜந்துக்களையும் கொண்டு வருகிறது என்று கூறலாம். இதனால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று பாருங்கள்.
வீட்டை சுத்தமாக வையுங்கள்
நீங்கள் வீட்டில் பல்லி மற்றும் பூச்சிகளை விரட்டவேண்டும் என்றால் அதற்கு முதலில் உள்ள எளிய மற்றும் சிறந்த வழி என்றால், வீட்டை சுத்தமாக வைக்கவேண்டியது தான். பெருக்கி, துடைத்து தரைகளை சுத்தப்படுத்துங்கள். வீட்டில் வீணான உணவுகள் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துங்கள். பாத்திரங்களை சாப்பிட்ட உடனே கழுவிவிடவேண்டும். இதனால் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் துர்நாற்றங்கள் வீட்டில் வீசாமல் இருக்கும்.
துவாரங்களை அடைத்துவிடவேண்டும்
மற்றொரு முக்கியமாக யோசனை என்றால், அது வீட்டில் உள்ள துவாரங்களை அடைப்பது. அதன் வழியாகத் தான் பள்ளிகள் வீட்டுக்குள் நுழைகின்றன. பல்லிகள் மற்றும் பூச்சிகள் ஜன்னல்களின் வழியாகவும் வீட்டுக்குள் புகுகின்றன. அதற்கு ஜன்னல்களை நெட் கொண்டு மூடிவிடலாம். காற்றோட்டமும் இருக்கும். பூச்சிகளும் நுழையாமல் இருக்கும்.
இயற்கை பூச்சிக் கொல்லிகள்
கடுமையான வாசம் வீசும் ஸ்பிரேகளும், காய்கறிகளும் உதவும். இது வீட்டை பூச்சிகள் மற்றும் பல்லிகளிடம் இருந்து காக்கும். சில கடுமையான வாசம் வீசும் மூலிகை ஸ்பிரேக்களை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். இது பூச்சிகளுக்கு பிடிக்காது. இவற்றை நீங்கள் வீட்டில் இல்லாதபோது அடித்துவிட்டு செல்லுங்கள்.
சமையலறை கழிவுகள்
நீங்கள் பூண்டு, வெங்காயம் மற்றும் முட்டை ஓடு போன்ற சமையலறை கழிவுகளைப் பயன்படுத்தியும் பூச்சி மற்றும் பல்லிகளை விரட்டலாம். வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி வைக்கும்போது ஏற்படும் கடும் துர்நாற்றம் மற்றும் முட்டை ஓட்டின் நாற்றமும் பல்லிகள் மற்றும் பூச்சிகளுக்குப் பிடிக்காது.
லெமன் ஸ்பிரே
நீங்கள் வீட்டை பூச்சிகள் மற்றும் பல்லிகள் இல்லாமல் வைத்துக்கொள்ள ஏற்ற வழியாக எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை சூடான நீருடன் கலந்து தெளிக்கலாம். இதை நீங்கள் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள், கரப்பான்களை நீங்கள் அதிகம் பார்க்கும் இடங்களில் ஸ்பிரே செய்யலாம். கதவுக்கு அருகில், கபோர்ட்களில், ஜன்னல்களில் நீங்கள் இந்த தண்ணீரை தெளிக்கலாம்.
எஞ்சிய உணவுகளை மூடி வைக்கவேண்டும்
பல்லிகள் மற்றும் பூச்சிகளை அதிகம் கவர்ந்து இழுப்பது என்னவென்றால், மூடியிடப்படாத உணவுகள் மற்றும் அதில் இருந்து வரும் கடும் துர்நாற்றங்கள்தான். அவைதான் அவற்றுக்கு உணவும் கொடுக்கின்றன. எனவே எஞ்சிய உணவுகள் மற்றும் புதிதாக தயாரித்த உணவுகளை நீங்கள் எப்போதும் மூடியிட்டு அல்லது பாத்திரங்களில் அடைத்து வைக்கவேண்டும்.
நாப்தலின் பால்ஸ்கள்
கற்பூரங்கள் மற்றும் அந்துருண்டைகள் எனப்படும் நாப்தலின் பால்களை நீங்கள் பூச்சிகள், ஈக்கள் மற்றும் பல்லிகள் வரும் ஸ்டோர் ரூம் போன்ற இடங்களில் இட்டு வைக்கவேண்டும். இதன் கடும் துர்நாற்றம், பல்லிகள், பூச்சிகள் மற்றும் மற்ற ஜந்துக்களை விரட்டும் தன்மை கொண்டது.
எலுமிச்சை புல் வளர்க்கவேண்டும்
எலுமிச்சை புற்களை நீங்கள் வளர்க்கவேண்டும். இதில் இருந்து வரும் கடுமையான எலுமிச்சையின் வாசம், பூச்சிகள் மற்றும் பல்லிகளை ஓடவிடும் தன்மை கொண்டது. ஓமவல்லி இலைகளுக்கும் பூச்சிகளை விரட்டும் தன்மை உண்டு. எனவே இவற்றையும் வீட்டில் வளர்த்து பூச்சிகளை மற்றும் பல்லிகளை விரட்டுங்கள்.

டாபிக்ஸ்