Caramel Semiaya Payasam : கேரமல் சேமியா பாயாசம்! புத்தாண்டுக்கு ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி!
Caramel Semiaya Payasam : கேரமல் சேமியா பாயாசம்! புத்தாண்டுக்கு ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி!
தேவையான பொருட்கள்
முழு கொழுப்புள்ள பால் – ஒரு லிட்டர்
சேமியா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் – தேவையான அளவு
முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடி
காய்ந்த திராட்சை – ஒரு கைப்பிடி
ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன்
செய்முறை -
ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி காய்ச்சி கொள்ளவேண்டும். காய்ச்சிய பாலில் சிறிது தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கேரமல் சிரப் செய்ய ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவேண்டும்.
சர்க்கரை கரைந்து பிரவுன் நிறமாக மாறியதும் சிறிது சிறிதாக காய்ச்சிய பாலை சேர்த்து கலந்து விடவேண்டும். 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவேண்டும்.
கடாயில் நெய் சேர்த்து, நெய் உருகியவுடன், முந்திரி, காய்ந்த திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகல கடாயில் நெய் சேர்த்து சேமியாவை மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தண்ணீர் ஊற்றி சேமியாவை வேகவிடவேண்டும். சேமியா முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்த பாலை ஊற்றி கலந்து விடவேண்டும்.
சேமியா முழுதாக வெந்ததும் தயார் செய்த கேரமல் சிரப்பை ஊற்றி நன்றாக கலந்து விடவேண்டும்.
அடுத்து ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் கொதிக்க விடவேண்டும்.
அருமையான கேரமல் சேமியா பாயாசம் தயார்.
பாயாசம், இந்தியா முழுவதும் பண்டிகை நாட்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு ஆகும். இதை வெவ்வேறு பொருட்கள் கலந்து வெவ்வேறு சுவைகளில் செய்யலாம். கேரமல் பாயாசம் கூடுதல் சுவையை கொடுக்கிறது. கேரமலை செய்து பின்னர் பாயாசம் வைக்க வேண்டும். வழக்கமான பாயாசம்தான், ஆனால் கேரமல் கலந்து செய்யப்படுவது.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்