வயதாகும்போது, செக்ஸில் முன்புபோல் செயல்பட முடியவில்லை? குதிரை பலம் கொடுக்கும் 5 பானங்கள்! இதோ பட்டியல்!
வயது அதிகரிக்கும்போது குறையும் செக்ஸ்வல் ஆர்வம்; அடித்து எழுப்ப உதவும் 5 பானங்கள் என்ன?
வயதாகும்போது உங்களுக்கு செக்ஸில் நாட்டம் குறைவது என்பது இயல்பான ஒன்றுதான். பெண்ணுறுப்பில் வறட்சி, மூட்டுகளில் வலி, செக்ஸில் ஆர்வம் குறைவது என உங்கள் நெருக்கமான நேரங்கள் உங்கள் இணையருடன் அதிகம் இருக்காது. இது உங்கள் உறவில் எண்ணற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனினும், நீங்கள் சில விஷயங்களைச் செய்து உங்கள் செக்ஸ் ஆர்வத்தை அதிகரித்துக்கொள்ளலாம். நல்ல உணவே அந்த மாற்றங்களைச் செய்யும். அப்படி நீங்கள் பருகக்கூடிய பானங்கள் என்னவென்று பாருங்கள். பெண்கள் தங்களின் செக்ஸ் உணர்வுகளை எப்படி அதிகரித்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், அதைச் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அதற்கு நிபுணர் சில உடற்பயிற்சிகள், சரிவிகித உணவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என கூறுகிறார்கள். இதனால் உங்களின் பாலியல் உணர்வுகள் தூண்டப்படுகிறது. மேலும் உங்கள் பாலியல் பலம் அதிகரிக்கிறது. எனவே நீங்கள் சில உணவுகள் மற்றும் பானங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் உங்களின் செக்ஸ் வாழ்வு சிறக்கும். பாலியல் எண்ணம் அதிகரிக்கும். அவை என்னவென்று பாருங்கள். ஏனெனில் நல்ல உணவுகள் உங்கள் செக்ஸ்வல் ஆர்வத்தை அதிகரிக்கும். தரமில்லாத உணவுகள் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும். சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், ஆப்பிள், பெரிகள் மற்றும் கீரைகள் என அனைத்தும் நீங்கள் அதிகம் எடுத்து வந்தால், உங்களின் செக்ஸ் வாழ்க்கைக்கு வலு கொடுக்கும். பீட்ரூட், கீரை மற்றும் மற்ற வேறு காய்கறிகளும் உதவுகிறது. டார்க் சாக்லேட்கள் முக்கியமானவை. இங்கு சிலவற்றை கொடுத்துள்ளோம். இவை உங்கள் உடலில் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்கக் கூடியவை ஆகும்.
கிரீன் டீ
உங்கள் செக்ஸ்வல் ஆர்வத்தை இயற்கை வழியில் தூண்டுவதில் முக்கியமானது கிரீன் டீயும் ஒன்று. கிரீன் டீ உடல் எடையைக் குறைக்க மட்டுமல்ல, அது உங்களின் செக்ஸ்வல் ஆர்வத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை பெண்களுக்கு செக்ஸில் ஆர்வம் ஏற்படுத்த பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் உள்ள அதிகப்படியான கேட்சின்கள் உங்களுக்கு தேவையான உறுப்புக்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் உங்களின் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கிறது.
ப்ளாக் காபி
காபி, உங்களின் மனநிலையை மேம்படுத்தும் ஒரு முக்கிய பானமாகும். இது உங்களின் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள காஃபைன்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் மனநிலையை அதிகரிக்கிறது. தினமும் காபி பருகுபவர்களுக்கு செக்ஸ்வல் நாட்டம் குறையும் ஆபத்து குறைவு என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ரெட் வைன்
வைனை விரும்பி சாப்பிடுபவர்கள், அதை எப்போதும் எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு செக்ஸ்வல் ஆர்வத்தை தூண்டுவதில் வைன் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உங்களுக்குப் பிடித்தால், பெண்கள் இரண்டு டம்ளர் வைன் பருகலாம். ஆனால் அதிகம் சாப்பிட்டுவிடக்கூடாது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை அதிகரிக்க வைன் உதவுகிறது.
வாழைப்பழ ஷேக்
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் நீங்கள் வாழைப்பழ ஷேக் பருகலாம். இது உங்கள் ஆர்வத்தை அதிகரிக்கும். இது உங்கள் உடலுக்கும் எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும். உடலுக்கு வலு கொடுத்து, உங்கள் செக்ஸ்வல் திறனை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது. இது ஆண்களில் செக்ஸ் ஆர்வம் மற்றும் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது. எனவே இதை தினமும் எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தால் தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.
மாதுளை பழச்சாறு
செக்ஸ்வல் ஹார்மோன்களை வலுப்படுத்துவதில் மாதுளை பழச்சாறு மிகவும் சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களுக்கு இது செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்கிறது. ஆண்களுக்கும் ஏற்றதுதான். செக்ஸ் உறுப்புக்களுக்கு இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உங்கள் செக்ஸ் ஆர்வம், செயல்படும் திறன் அதிகரிக்கிறது. ஆனால் பதப்படுப்பட்ட மாதுளை பழச்சாறை பருகக்கூடாது.
உணவுக்கும், உங்கள் செக்ஸ் ஆர்வத்துக்கும் நீண்ட தொடர்பு உண்டு. எனவே உங்கள் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்க நீங்கள் நல்ல உணவுகளைப் பின்பற்றவேண்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்