புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டறிந்த ரஷ்யா! இலவசமாக கொடுக்கவும் திட்டம்! பின்னணி என்ன?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. இதற்கான தெளிவான காரணிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த புற்றுநோய் என்பது இறந்த செல்களின் அதீத வளர்ச்சி என்பதாகும்.

உலக அளவில் புதியதாக பல நோய்கள் பரவி வருகின்றன. அதிலும் சில நோய்கள் உயிர்க் கொல்லி நோயாகவும் உள்ளது. அவ்வாறு தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரோனா தொற்று உலகம் முழுவயதும் பரவி பல லட்ச கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனை சமாளித்து உலகம் இப்போது தான் மூச்சு விட தொடங்கியுள்ளது. இருப்பினும் புதிய நோய்கள் குறித்து அச்சுறுத்தலும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தும் ஒரு நோய் தான் புற்றுநோய்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. இதற்கான தெளிவான காரணிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த புற்றுநோய் என்பது இறந்த செல்களின் அதீத வளர்ச்சி என்பதாகும். இதற்கு ஒரு தீர்வாக தற்போது ரஷ்யா சுகாதார மையம் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தடுப்பூசி
புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியது. இது குறித்து பேசிய ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின், “இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டிலேயே இலவசமாக விநியோகிக்கப்படும்” என்று கூறினார். இந்த செய்தியை ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.