தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Cancer Research Foods That Prevent Cancer From Spreading To Other Parts Of The Body Discovery In Indian Research

Cancer Research : புற்றுநோய் உடலில் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுக்கும் உணவுகள் – இந்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Priyadarshini R HT Tamil
Feb 27, 2024 03:21 PM IST

Cancer Research : புற்றுநோய் உடலில் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுக்கும் உணவுகள் – இந்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Cancer Research : புற்றுநோய் உடலில் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுக்கும் உணவுகள் – இந்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!
Cancer Research : புற்றுநோய் உடலில் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுக்கும் உணவுகள் – இந்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

புற்றுநோய் சிகிச்சையில் முக்கியமானது புற்றுநோய் பரவலை பிற இடங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்துவதே.

புற்றுநோய் பரவலுக்கு முக்கிய காரணம் குறிப்பிட்ட ஒரு உறுப்பில் ஆரம்பித்த புற்றுநோய் செல்கள், அந்த உறுப்பிலிருந்து தனியாக பிரிந்து ரத்தம், நிணநீர் (Lymph) வழியாக பிற இடங்களுக்கு பரவுகிறது என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளது.

இந்நிலையில் மும்பை பேரல் எனுமிடத்தில் உள்ள டாட்டா புற்றுநோய் மைய ஆய்வாளர்கள் புற்றுநோய் குறிப்பிட்ட உடம்பிலிருந்து வேறு வழியாகவும் பரவும் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சையின்போது மருந்துகள் (Chemotherapy), அறுவைசிகிச்சை (Surgery), கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy)) கொல்லப்பட இருக்கும் புற்றுநோய் செல்களிலிருந்து குரோமோசோம்களின் சிறுபகுதி (cfChPs) பிரிந்து வெளிவந்து அவை ரத்தம், நிணநீர் வழியாக பிற இடங்களுக்கு சென்று சுகாதாரத்துடன் இருக்கும் நல்ல செல்களோடு தன்னை இணைத்துக்கொண்டு அங்கு புற்றுநோய் பரவலை ஏற்படுத்துகிறது என ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளனர்.

இந்த நோய் பரவலை மெட்டாஸ்டேசிஸ் Metastasis என அழைப்பர்.

எனவே, புற்றுநோய்க்கு எடுக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுமோ, புற்றுநோய் செல்களின் குரோமோசோம்கள் சிறுபகுதி பிரிந்துசென்று நல்ல செல்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு, அங்கும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற புது செய்தியும் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

இந்த புது ஆய்வில் மனிதர்களில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்கள் எலிகளுக்கு (Mice) சோதனை மூலம் செலுத்தப்படுகிறது. அவை எலிகளுக்கு புற்றுநோய் பாதிப்பை மார்பகங்களில் எற்படுத்துவதுடன், எலிகளின் மூளைகளை பரிசோதித்ததில், அங்கும் புற்றுநோய் செல்களின் குரோமோசோம்களின் சிறுபகுதி (புரதம்) (cfChPs) இருப்பது உறுதிசெய்யப்பட்டதிலிருந்து, புற்றுநோய் செல்களின் குரோமோசோம்களின் சிறுபகுதி தனியாகபிரிந்து தொலை தூர உறுப்புகளுக்கு ரத்தம், நிணநீர் வழியாக பரவி பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

இந்தநோய் பரவலைத் தடுக்க என்ன செய்யலாம் என ஆலோசித்ததில், சில உணவுப்பொருட்கள், R-Cu-resveratrol-Copperஐ கலந்து பயன்படுத்தும் (Neutraceuticals)போது, (resveratrolஐ திராட்டையின் தோல், முழுச்சதைக்கனி (Berries) தோலிருந்து எளிதில் எடுக்க முடியும்) எலிகளின் மூளையில் புற்றுநோய் பாதிப்பு (cfChPs) குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

R-Cu pro-oxidant தன்மையுடன் செயல்பட்டு Free oxygen radicleகளை அதிகம் உற்பத்தி செய்து, அவை குரோமோசோம்களுடன் தன்னை இணைத்துக்கொள்வதால், புற்றுநோய் செல்களின் குரோமோசோம்களின் சிறுபகுதி நல்ல வளமான செல்களுடன் இணைத்துக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்துவது குறைகிறது.

இதனால் R-Cu, புற்றுநோய் மருந்து சிகிச்சையின் பக்கவிளைவுகளை குறைக்க பயன்படுகிறது என்பது ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

R-Cu உணவுமருந்து, எலும்பு மஜ்ஜை சிகிச்சை அளிக்கப்பட்ட 20 ரத்தப் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஏற்பட்ட வாய் மற்றும் தொண்டைப் புண்களை பெருவாரியாக ஆற்றியுள்ளது ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, உணவுப்பொருட்கள் மூலம் அளிக்கப்படும், R-Cu சிகிச்சை புற்றுநோய் சிகிச்சையின் பின்விளைவுகளை கட்டுப்படுத்துகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

அவை புற்றுநோயின் மூர்க்கத்தனமான பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

தமிழகத்திலும், இந்த R-Cu சிகிச்சை, இதுபோன்ற உணவுப்பொருட்கள் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உணவே மருந்து எனும் நம் முன்னோர் சொல் திரும்பவும் மெய்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்