Cooking Utensils : புற்றுநோய் கொடுக்கும் நான்ஸ்டிக்! முளையை பாதிக்கும் அலுமினியம்! சமைக்க சிறந்த பாத்திரங்கள் எவை?
சமைக்க பயன்படுத்தும் உலோக, மண் பாத்திரங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள்
மண் பாத்திரம் -
• மண் பாத்திரத்தில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கிறது. இதைத் தெரிந்துதான் நம் முன்னோர்கள் மண் பாத்திரத்தில் சமைத்து உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.
• மண் பாத்திரத்தில் சமைக்கும் போது வெப்பம் சீராக பரவி உணவின் சத்துக்கள் அழியாமல் காக்கிறது.
• உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் போன்றவைகள் அழியாமல் காக்கிறது.
• மண் பானையில் சமைக்கும் போது உணவின் அமிலத் தன்மை மாறாமல் சமநிலையில் வைத்திருக்கிறது.
• உணவின் சத்தை, சுவையை மாற்றாமல் அப்படியே கொடுக்கும் தன்மை மண் சட்டிக்கு மட்டும் தான் உண்டு.
• இருப்பதிலேயே எவ்வித பக்கவிளையும் இல்லாத ஒரு வகையான பாத்திரம் தான் மண் பாத்திரம். இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, சமைக்கும்போது உணவின் சுவையும் கூடுகிறது. இயற்கையான சத்தும் அழியாமல் கிடைக்கிறது.
இரும்பு பாத்திரம் -
• இரும்பு பாத்திரத்தில் வெப்பம் சீராக பரவும்.
• இதில் இருக்கும் இரும்புச்சத்து உணவோடு கலந்து ரத்த சோகை நோய் வராமல் பாதுகாக்கிறது.
• இரும்பு, ஜிங்க், தாமிரம் போன்றவை நம் உடலுக்கு தேவையான சத்துக்கள். இவைகள் இரும்பு சட்டியை பயன்படுத்துவதன் மூலம் தினசரி கிடைக்கிறது.
வெண்கல பாத்திரங்கள் -
• பித்தளை பாத்திரத்தில் சமைக்கும்போது அது நுண்ணிய அளவில் நம் உடலில் சேர்வதால் நன்மைகள் அதிகம்
• இதில் சமைப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்
• பித்தளை பயன்பா உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் தருகிறது.
• பித்தளை குடத்தில் தண்ணீர் வைத்து குடிக்கும்போது உடலில் வெப்பம் குறையும்.
• பித்தளை பயன்பாடு உடலில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
• உணவுப் பொருட்களின் இயற்கை குணங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது.
• கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சீர்ப்படுத்தி உடலில் தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது. இதனால் வயிறு சுத்தமடைகிறது. ஜீரண சக்திக்கு உதவுகிறது.
• பித்தளையில் ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
• தைராய்ட் சுரப்பியின் செயல்பாட்டை சரிசெய்கிறது.
• எலும்புகளை பலப்படுத்துகிறது. கீழ்வாதம் மற்றும் முடக்குவாதத்தை சரி செய்கிறது.
செம்பு பாத்திரம் -
• உலோக பாத்திரங்களில் சமைக்கும்போது உணவு நீண்ட நேரம் மிதமான சூட்டில் இருப்பதால் உணவின் தன்மை மாறுவதில்லை.
• செம்பு பாத்திரங்களில் சமைக்கும்போது மூட்டு வலி, ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் உருவாகாமல் தடுக்கிறது.
• செம்பு பாத்திரத்தில் சமையல் செய்து சாப்பிடுபவர்களுக்கு அடிபட்டாலும் காயம் விரைவில் ஆறிவிடும்
• ரத்த அணு உற்பத்தியை அதிகரிக்கும் வல்லமை செம்புக்கு உண்டு. மேலும் பித்தநோய், கண்நோய், கருப்பை நோய், சுவாசக்கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் வல்லமை இதற்கு உண்டு.
• அதனால் தான் செம்பு பாத்திரங்களில் நீர் வைத்து குடிக்க அறிவுறுத்துகிறார்கள். எனினும் தினமும் இதில் சமைக்க வேண்டியதில்லை.
• கோயில்களில் செம்பு பாத்திரங்கள் தான் இன்றும் பயன்பாட்டில் உள்ளது
• ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்துதான் பயன்படுத்த வேண்டும்.
அலுமினியம் -
• இன்று பலரது வீடுகளிலும் அலுமினியம் தான் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அலுமினியத்தை நீண்ட நேரம் வெப்பப்படுத்தும் பொது கருப்பாக கலவை வெளியேறும். இது அலுமினியம் தான். இது மூளையில் உள்ள நியூரான்களை பாதிப்புக்குள்ளாக்க வாய்ப்புண்டு.
• எல்லா நாட்களிலும் அதிக வெப்பத்தோடு இதில் சமைக்கும்போது இந்த பாத்திரத்திலிருந்து கருப்பு வெளியேறினால் மட்டும் தான் ஆபத்து அதனால் பதமாக சமைத்து வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.
• இதில் டீ போடுவதோ, உப்பு சேர்த்து சமைக்கும்போதும் அதில் இருக்கும் அமிலமும், அலுமினியமும் வினைபுரிந்து உணவின் சத்துகளை இழக்கச் செய்யும்.
எவர்சில்வர்
• எவர் சில்வர் பாத்திரங்கள் பாதுகாப்பானவை. இவற்றில் நிக்கல், குரோமியம் போன்ற வேதிப்பொருள்கள் கலந்தாலும் குறைந்த அளவே என்பதால் இவை அதிக பாதிப்பு உண்டாக்குவதில்லை. இதில் எவ்வித நன்மையும் இல்லை. அதே நேரம் தீமையும் இல்லை என்பதால் இதில் சமைக்கலாம்.
நான்ஸ்டிக் பாத்திரங்கள் -
• ஒட்டாமல் வரக்கூடிய உணவு, எண்ணெய் பயன்படுத்தாமல் தயாரிக்க முடியும் என்பதால் பெருமளவு இல்லத்தரசிகள் இதை பயன்படுத்துகிறார்கள். இது எவர்சில்வர் பாத்திரங்களுக்கு அடுத்தபடியாக வந்த பொருள். எளிதாக சமைக்க முடியும் என்றாலும் இதில் புற்றுநோய் அபாயம் கொண்ட டெஃப்ளான், PFOA (Perfluorooctanoic acid) போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது.
• இவை பாதுகாப்பாக பாத்திரத்திலேயே இருக்கும் வரை பிரசனை இல்லை. ஆனால் அதிக நேரம் அதிக வெப்பத்தில் சமைக்கும்போது இதிலிருக்கும் நச்சு வெளியேறுகிறது. அதனால் சமைக்கும்போது கூடுதல் கவனமெடுத்து மிதமான தீயில் சமையுங்கள். அதேநேரம் அதை சுத்தப்படுத்தும்போதும் அதிக அழுத்தத்தோடு தேய்க்க வேண்டாம். பாத்திரத்தில் கீறல் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் மாற்றிவிடுவதே நல்லது
எனவே உலோக பாத்திரங்களான செம்பு, பித்தளை, வெண்கலம் எல்லாமே சமையலுக்கு தகுந்தவை. அதை அவ்வபோது சில நேரங்களில் சில உணவுகளுக்கு பயன்படுத்துங்கள். இயன்றவரை இயற்கை தந்த மண் பாத்திரங்கள் இயற்கையை போன்றே பரிசுத்தமானவை ஆரோக்கியம் நிறைந்தவை என்பதால் இதையும் இனி பயன்படுத்த தொடங்குங்கள். நவீனத்தை கவனத்தோடு கையாளுங்கள். பாரம்பரியத்தை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது நம் அனைவருக்கும்.
தகவல்கள் -
சித்த மருத்துவர் காமராஜ்,
முன்னாள் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்.
டாபிக்ஸ்