Cancer Causing Foods : வேண்டவே வேண்டாம் இந்த உணவுகள்! எத்தனை கெமிக்கல்கள், புற்றுநோய் ஆபத்தும்! கவனம் தேவை!
Cancer Causing Foods : இந்த உணவுகள் மட்டும் வேண்டவே வேண்டாம். எத்தனை கெமிக்கல்கள், புற்றுநோய் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.
சில உணவுகளை நாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நாமும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அவை என்ன உணவு என்றும், ஏன் சாப்பிடக்கூடாது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
அந்த உணவுகள் புற்றுநோய் போன்ற ஆபத்துக்களை அல்லது நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவையாகும்.
கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்
கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் பிஸ்ஃபினால் ஏ என்ற வேதிப்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கள் இருக்கும்.
கார்பனேட் செய்யப்பட்ட குளிர் பானங்கள்
கார்பனேடட் செய்யப்பட்ட குளிர்பானங்களில், அதிகளவில் சர்க்கரை இருக்கம். இதனால் கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில சோடா வகைகளில் பயன்படுத்தப்படும் நிறமிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் உங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஆற்றல் கொண்டவையாக இருந்துவிடும். எனவே எச்சரிக்கை தேவை. இதுபோன்ற பானங்களை நீங்களும் எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தைகளுக்கும் வாங்கித்தரக்கூடாது.
ஹைட்ரோஜெனேட்டட் எண்ணெய்
ப்ராசஸ் செய்யப்படும் உணவுகளின் வாழ்நாளை நீட்டிக்க, ஹைட்ரோஜெனேட்டட் எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது. இது ஃப்ரி ராடிக்கல்களை வெளியிடுகிறது. அது உங்கள் உடலில் உள்ள செல்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. இது உடலில் கொழுப்பையும் அதிகரிக்கிறது. அதுவும் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்ன்
மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ஃப்ளூரோக்டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்ககூடியது. இதில் உள்ள செயற்கையான வெண்ணெயின் சுவையில் டையாசிடில் உள்ளது. இது நுரையீரல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
ரீஃபைண்ட் சர்க்கரை
அதிக ஃப்ரூட்டோஸ் கொண்ட கார்ன் சிரப்கள் மற்றும் மற்ற ரீஃபைண்ட் செய்யப்பட்ட சர்க்கரை இன்சுலீன் அளவை அதிகரிக்கக் கூடியவை, இதனால் உங்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் உட்பொருட்கள் அதிகம் உள்ளது. இவை, குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்களை அதிகரிக்கிறது.
ப்ராசஸ் செய்யப்பட்ட இறைச்சி
பேக்கான், சாசேஜ் போன்ற ப்ராசஸ் செய்யப்பட்ட இறைச்சி வகைகளில் பிரசர்வேட்டிவ்கள் மற்றும் நைட்ரேட்கள் உள்ளது. இதில் நிட்டிரேட் என்பது உள்ளது. இந்த வேதிப்பொருட்கள், நிட்ரோசாமைன்களை உருவாக்குகிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகின்றன.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சி அதிகம் எடுத்துக்கொள்வது குடல் புற்றுநோயை ஏற்படுத்தும். இதை அதிக வெப்பத்தில் கொதிக்கவைக்கும்போது, சிவப்பு இறைச்சியில் ஹெட்ரோ சைக்கிளின் அமைன்களை உற்பத்தி செய்கிறது. பாலிசிலிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்களும் உருவாகின்றன. இதனால் புற்றுநோய் ஏற்படுகிறது.
ஊறுகாய்கள்
ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளது. இதனால் ஊறுகாய் சாப்பிடுவது வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இதில் உள்ள அதிகளவிலான உப்புத்தூள் வயிற்றின் சுவர்களில், ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் உங்கள் வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஸ்மோக்ட் உணவுகள்
புகையின் மூலம் உணவை சமைக்கும்போது, அவை தார் என்ற புற்றுநோயை உண்டாக்கும் உட்பொருளுடன் சேர்கின்றன. இதனால் புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளது. இதுவும் வயிறு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.
உப்பு மீன்
ஆசிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் உப்பு மீன், அதாவது கருவாட்டில் நைட்ரோசாமைகள் உள்ளது. இவையும் புற்றுநோய்க்கான காரணிகள் ஆகும். இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் மாற்றுகள்
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை சாப்பிடலாம். வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத உணவுகளை தேடித்தேடி சாப்பிடலாம். நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள், செரிமானத்தை போக்கக்கூடியவை. புற்றுநோய் ஆபத்தை குறைக்கக்கூடியவை.
தாவர புரத உணவுகள், சிக்கன் போன்ற இறைச்சி வகைகள், இயற்கையில் இனப்பு சுவையை தரக்கூடிய தேன், மேப்பிள் சிரப் போன்றவற்றையும் மிதமான அளவில் எடுத்துக்கொள்ளலாம். ரீஃபைண்டு சர்க்கரையை எடுத்துக்கொள்வதற்கு பதில், வீட்டில் செய்யப்பட்ட சிற்றுண்டிகளை உட்கொள்ளலாம். பாப்கார்னை ஸ்டவில் சமைக்கலாம். ஆரோக்கியமான எண்ணெய்களான ஆலிவ், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
டாபிக்ஸ்