பீட்ரூட் செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்? எப்படி என்று பாருங்கள்! தினமும் இயற்கை பளபளப்பு அதிகரிக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பீட்ரூட் செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்? எப்படி என்று பாருங்கள்! தினமும் இயற்கை பளபளப்பு அதிகரிக்கும்!

பீட்ரூட் செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்? எப்படி என்று பாருங்கள்! தினமும் இயற்கை பளபளப்பு அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil
Dec 31, 2024 07:00 AM IST

வீட்டிலே பீட்ரூட் செடிகளை வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.

பீட்ரூட் செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்? எப்படி என்று பாருங்கள்! தினமும் இயற்கை பளபளப்பு அதிகரிக்கும்!
பீட்ரூட் செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்? எப்படி என்று பாருங்கள்! தினமும் இயற்கை பளபளப்பு அதிகரிக்கும்!

நீங்கள் சரியான இடத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்

நல்ல சூரியஒளி உள்ள இடமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நல்ல மண் இருக்கவேண்டும். நல்ல வடிகால் உள்ள தரமான மண்ணாக இருக்கவேண்டும். பீட்ரூட் வளர்வதற்கு நல்ல மண் இருந்தால் போதும். அங்கு பீட்ரூட் செழித்து வளரும்.

மண்ணை தயார்படுத்துதல்

12 இன்ச் ஆழம் வரை மண்ணை தோண்ட வேண்டும். அதில் உள்ள குப்பை கூளும் மற்றும் கற்களை நீக்கவேண்டும். மண்ணில் உரம் மற்றும் ஆர்கானிக் உரம் சேர்த்து மண்ணின் வளத்தை அதிகரிக்கவேண்டும்.

நல்ல விதைகள்

உங்களுக்கு பிடித்த பீட்ரூட் வகைகையைத் தேர்ந்தெடுங்கள். சிவப்பு, பொன்னிறமானது அல்லது இரண்டும் கலந்தது என்று எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

விதைத்தல்

மண்ணில் நேரடியான விதைகளை அரை இன்ச் ஆழம் வரை தூவுங்கள். 2 முதல் 4 இன்ச் இடைவெயில் விதைகளை 12 இன்ச் தூரத்தில் விதையுங்கள்.

தினமும் தண்ணீர் விடுங்கள்

மண்ணை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் தண்ணீர் தேங்கவிடக்கூடாது. தொடர்ந்து தண்ணீர் விடவேண்டும். அப்போதுதான் பீட்ரூட்கள் வீணாகாது.

நாற்றுகள்

நாற்றுகள் 2 இன்ச் அளவு உயரம் இருக்கும்போது, அவற்றை பறித்து 3 முதல் 4 இன்ச் இடைவெளிவிட்டு, அவற்றை நட்டுவைக்கவேண்டும். அப்போதுதான் செடிகள் நன்றாக வளரும்.

கண்காணிப்பு

பூச்சிகள் மற்றும் களைகள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் போதிய அளவு ஆர்கானிக் உரமிடவேண்டும்.

அறுவடை காலம்

2-3 இன்ச் விட்டம் வந்தவுடன் பீட்ரூட்கள் அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று பொருள். கிட்டத்தட்ட நட்ட 6 முதல் 8 வாரத்துக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். மண்ணில் இருந்து அவற்றை நன்றாக பறித்து எடுக்கவேண்டும்.

பீட்ரூட்டின் நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது

ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது

பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கலோரிகள் 29, புரதம் 1.4 கிராம், கொழுப்பு, 0.1 கிராம், கார்போஹைட்ரேட் 6.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.0 கிராம், 304 மில்லிகிராம் பொட்டாசியம், 120 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது.

பீட்ரூட் சிலருக்கு சிறுநீரகத்தில் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. பீட்ரூட்டில் உள்ள நற்குணங்களுக்காக அதை உணவில் சேர்த்துக்கொண்டு, பல்வேறு ரெசிபிகள் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்

உடலுக்கு தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் பீட்ரூட்களை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பீட்ரூட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் தினமும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் பட்டியலில் பீட்ரூட் உள்ளது.

எனவே பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளம் இடுங்கள். எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. கட்டாயம் பீட்ரூட்டில் இந்த கோலா உருண்டையை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.