சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடலாமா?.. ஆயுர்வேதத்தின் படி சாதம் சமைப்பதற்கான சரியான முறை என்ன? - விபரம் இதோ!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதம் சாப்பிடுவது குறித்து யோசிப்பதுண்டு. சாதம் சாப்பிடாமல் இருப்பது கஷ்டம். ஆனால், சாதம் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க, சாதம் வேக வைக்கும் முறையில் சில கவனங்கள் தேவை என நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

சர்க்கரை நோயாளிகள் பலர் சாதம் சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல என்று நினைக்கிறார்கள். அதேநேரம் சாதம் சாப்பிடும் பழக்கத்தை விடுவதற்கு பல முயற்சிகள் செய்கிறார்கள். நிபுணர்களின் கருத்துப்படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எடை குறைக்க விரும்புபவர்கள் சாதம் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது அல்ல. ஆனால், சமைக்கும் முறை சரியாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, சாதம் சமைக்கும் போது சிலவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நம்பப்படுகிறது.
பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி அல்லது வெள்ளை அரிசி என எந்த வகை அரிசியாக இருந்தாலும் இந்த ஆயுர்வேத முறையில் சமைத்து சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது. இவ்வாறு சமைத்தால் சாதம் எளிதில் செரிமானமாகும். இப்போது சாதம் சமைப்பதற்கான ஆயுர்வேத சரியான முறை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆயுர்வேதத்தின் படி சாதம் சமைப்பதற்கான சரியான முறை என்ன?
1. சரியான அரிசியைத் தேர்ந்தெடுங்கள்
சாதம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சரியான அரிசியைத் தேர்ந்தெடுப்பது. ஊட்டச்சத்துக்களுக்கு சுமார் ஒரு வருடம் பழைய அரிசி மிகவும் நல்லது. பழுப்பு அரிசியாக இருந்தாலும், சிவப்பு அரிசியாக இருந்தாலும் அல்லது பாதாமி அரிசி போன்றது எதுவாக இருந்தாலும் பழையதைத் தேர்ந்தெடுங்கள்.