இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது; சுவையும் அலாதியானது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது; சுவையும் அலாதியானது!

இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது; சுவையும் அலாதியானது!

Priyadarshini R HT Tamil
Published Oct 20, 2024 06:00 AM IST

இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது. சுவையும் அலாதியானது. அது எப்படி என்று பாருங்கள்.

இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது; சுவையும் அலாதியானது!
இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது; சுவையும் அலாதியானது!

தேவையான பொருட்கள்

நெய் – ஒரு கப்

கடலை மாவு – ஒரு கப்

பால் – ஒரு கப்

சர்க்கரை – 2 கப்

துருவிய தேங்காய் – ஒரு கப்

நட்ஸ் பொடி – ஒரு கப்

(முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

செய்முறை

ஒரு அகலாமான கடாயில் கடலைமாவை சேர்த்து நல்ல வாசம் வரும்வரையில் வறுத்துக்கொள்ளவேண்டும். கடலை மாவை வறுக்கும்போது மிகவும் கவனம் தேவை. ஏனெனில் அது உடனடியாக கருகிவிடக்கூடியது. எனவே மிகவும் குறைவான தீயில் வைத்து வறுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

பச்சை வாசம் போய், நல்ல வாசம் வந்தவுடன், நெய் மற்றும் பால் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவேண்டும். மாவு கட்டிப்படாமல் இருக்க தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். சிறிது நேரம் கிண்டிவிட்டு அடுத்து நட்ஸ் பொடி, துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும். கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த கலவை கெட்டியாகத் திரண்டு வரவேண்டும்.

அதுவரை தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும். கிட்டத்தட்ட அல்வா போலத்தான். இடையில் எடுத்தால் பர்ஃபி கெட்டிப்பட்டு, சரியான பதத்தில் வராது. எனவே தொடர்ந்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

அது கெட்டியானவுடன், ஒரு ட்ரேயில் நெய் தடவி அதில் கொட்டி, சிறிது நிமிடம் வைக்கவேண்டும். நன்றாக கெட்டியானவுடன், அதை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். இந்த பர்ஃபியை செய்வது மிகவும் சுலபம்தான், என்பதால் யார் வேண்டுமானாலும் எளிதில் செய்துவிடலாம்.

இந்த பர்ஃபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருக்கும். ஒருமுறை ருசித்தால், தீபாவளி அல்லாத நாட்களிலே ருசித்து மகிழ்வீர்கள்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.