Kavva Tea : தேநீர் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? இதோ அவர்களுக்காக காஷ்மீர் காவ்வா டீ! நாள் முழுவதும் புத்துணர்வு!
தேநீர் பிரியரா நீங்கள். இதோ சூப்பர் சுவையான காவ்வா டீ தயாரிப்பது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்
கிரீன் டீத்தூள் – ஒரு ஸ்பூன்
பாதாம் – 7 (துருவிக்கொள்ளவேண்டும்)
ஏலக்காய் – 3
பட்டை – ஒரு துண்டு
சர்க்கரை – 3 ஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 3 கப்
செய்முறை
முதலில் கிரீன் டீத்தூள், ஏலக்காய், பட்டை மூன்றையும் மிக்ஸி ஜாரில் ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன், அரைத்து வைத்துள்ளவற்றை அதில் சேர்க்கவேண்டும். இப்போது அடுப்பை முற்றிலும் குறைத்துவிட்டு, அனைத்தையும் வேகவிடவேண்டும்.
அடுப்பை அணைத்துவிட்டு, டீயை வடிகட்டி சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் துருவிய பாதாம் சேர்த்து பரிமாறவேண்டும். சூப்பர் சுவையில் அசத்தும். இந்த டீயை நீங்கள் ஒருமுறை பருகினால், தினமும் உங்கள் வீட்டில் காஷ்மீர் காவ்வா டீதான் குடிப்பீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மேலும் இந்த டீ உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக்கொடுக்கும். அதனுடன் உடல் எடையைக் குறைக்கவும் உதவும். உடலில் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும்.
கொழுப்புக்களை கரைக்க உதவும் மேலும் சில பானங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் தொங்கும் தொப்பையைக் குரைக்கும் பானங்கள் இதோ
கிரீன் டீ
கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள கேட்சின்கள், உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, உங்களின் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
எலுமிச்சை தண்ணீர்
உங்கள்ன் நாளை சூடான எலுமிச்சை தண்ணீருடன் துவங்கினால், அது உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்கிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக வைட்டமின் சி சத்துக்கள் அதற்கு உதவுகிறது.
இஞ்சி டீ
இஞ்சி டீயில் உள்ள செரிமான குணங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் பசியைக் குறைக்கிறது.
வெள்ளரி சாறு
வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது நீர்ச்சத்து நிறைந்தது. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிறு உப்புசத்தையும் குறைக்கும் தன்மையும் கொண்டது. இதனால் உங்கள் தொப்பையை குறைக்க இது உதவுகிறது.
புதினா டீ
புதினா செரிமானத்துக்கு சிறந்தது. அது உங்கள் பசியைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும் சிறந்த உணவாக உள்ளது. எனவே புதினாவில் தயாரிக்கப்படும் டீயும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
அன்னாசிப்பழச்சாறு
அன்னாசி பழத்தின் சாறில், ப்ரோமெலின் என்ற உட்பொருள் உள்ளது. இது செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தர்ப்பூசணி பழச்சாறு
தர்ப்பூசணி பழச்சாறில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்கிறது. தர்ப்பூசணி பழத்தின் சாறை பருகும்போது அது உங்கள் உடலில் தண்ணீரை தக்கவைக்கிறது. வயிறு உப்புசத்தை போக்குகிறது.
செலரி சாறு
செலரியின் சாற்றில் கலோரிகள் குறைவாக உள்ளது. நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டது. எனவே செலரியின் சாறு செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உப்புசத்தை குறைக்கிறது.
கழிவுநீக்க தண்ணீர்
வெள்ளரி, எலுமிச்சைப்பழம், புதினா போன்றவற்றை ஊறவைத்த கழிவுநீக்க தண்ணீரை ஒரு நாள் முழுவதும் பருகும்போது, அது உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இந்த தண்ணீரும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உங்கள் உடலுக்கு நல்லது.
பெர்ரி ஸ்மூத்தி
ப்ளு பெரியுடன், கொழுப்பு குறைந்த யோகர்ட்டை சேர்த்து ஸ்மூத்தியாக அடித்துக்கொள்ளவேண்டும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் கொழுப்பை குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்