கால்சியச் சத்துக்கள் : கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள்! இதை சாப்பிடுவதால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கால்சியச் சத்துக்கள் : கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள்! இதை சாப்பிடுவதால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?

கால்சியச் சத்துக்கள் : கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள்! இதை சாப்பிடுவதால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?

Priyadarshini R HT Tamil
Updated May 10, 2025 01:33 PM IST

கால்சியச் சத்துக்கள் : கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டால், அது உங்கள் உடலில் அதிகளவில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும். அவை என்னவென்று பாருங்கள்.

கால்சியச் சத்துக்கள் : கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள்! இதை சாப்பிடுவதால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?
கால்சியச் சத்துக்கள் : கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள்! இதை சாப்பிடுவதால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?

வெந்தயம்

100 கிராம் வெந்தயத்தில், 100 முதல் 150 கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம். இதை நீங்கள் நன்றாக சமைத்தால்தான் அதில் உள்ள கசப்புச் சுவை குறையும். இதை சமைத்து உண்ணும்போது, கால்சியச் சத்துக்களை உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது. ஃபைட்டேட்களை உடைக்கவும் உதவுகிறது.

முருங்கைக்கீரை

100 கிராம் முருங்கைக்கீரையில் 250 முதல் 350 மில்லி கிராம் வரை கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் வதக்கல் செய்து சாப்பிடலாம் அல்லது சாம்பார், சூப், ரசம் என எதை வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். இதை சமைக்கும்போது, அதன் கால்சியச் சத்துக்கள் அதிகரிக்கும் மற்றும் கசப்புச் சுவை குறையும்.

கொண்டைக்கடலை

100 கிராம் கொண்மைக்கடலையில் 105 முதல் 120 மில்லி கிராம் அளவு கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் ஊறவைத்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் புரதச் சத்துக்கள் மற்றும் கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை சாதம் அல்லது ரொட்டி என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

முளைக்கீரை

100 கிராம் முளைக்கீரையில் 215 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதில் வதக்கல், கடையல், மசியல் என எதை வேண்டுமானாலும் செய்து மதிய உணவுக்கு சாப்பிடலாம் அல்லது தனியாக சமைத்தும் சாப்பிடலாம். இந்த கீரையில் இரும்புச் சத்துக்கள் மற்றும் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவும். இது தசைகளை சரிசெய்ய உதவுகிறது.

தயிர்

தயிர், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளில் பரிமாறப்படும் உணவுகளுள் ஒன்று. ஒரு கப் தயிரில் 200 முதல் 250 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் மதிய உணவோடு சேர்த்து சாப்பிடும்போது உடல் கால்சியத்தை உறிஞ்சவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. சமமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவின் அங்கமாக தயிர் உள்ளது. இதை நீங்கள் சாதம் அல்லது சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிலாம்.

ராஜ்மா (கிட்னி பீன்ஸ்)

100 கிராம் ராஜ்மாவில் 140 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் சாதம் அல்லது கிரீன் சாலட்டுடன் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள அதிகப்படியான புரதச் சத்துக்கள் மற்றும் கால்சியச் சத்துக்கள் இரண்டும் சேர்ந்துள்ளது. இதை நன்றாக ஊறவைத்து சாப்பிடும்போதுதான், ஊட்டச்சத்துக்கள் நிறைவாகக் கிடைக்கும். செரிமான ஆரோக்கியம் மேம்படும்.

எள்

ஒரு ஸ்பூன் எள்ளில் 88 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் சாலட்கள் மற்றும் கறிகளில் அதிகம் உள்ளது. அப்போதுதான் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சும். இதை நீங்கள் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சோயா பீன்ஸ்

உங்கள் உணவுகளில் சோயா பீன்ஸ்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவுடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். 100 கிராம் சோயா பீன்ஸில் 200 மில்லி கிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள புரதச் சத்துக்கள், சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு சிறந்தது.

ராகி

100 கிராம் ராகியில் 340 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. தாவர உணவுகளிலே கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ள ராகிதான். ராகியை நீங்கள் ரொட்டிகளாகவும் சாப்பிடலாம் அல்லது காலை நேரத்தில் கஞ்சியாகவும் சாப்பிடலாம். இதை சாப்பிட்டு அதிகாலை சூரிய ஒளியில் குளிக்கும்போது, அது உங்கள் உடலில் வைட்டமின் டி சத்துக்களை நன்றாக உறிஞ்ச செய்கிறது.

பன்னீர்

வீட்டிலே தயாரிக்கும் பன்னீர் அல்லது காட்டேஜ் சீஸ் இரண்டும், 100 கிராமில் 200 முதல் 250 மில்லி கிராம் வரை கால்சியச் சத்துக்கள் கொண்டது. இதை நீங்கள் மதிய உணவில் சாப்பிடலாம் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது குறைவான எண்ணெய் ஊற்றி செய்து சாப்பிடலாம். இது எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது. தசைகளையும் வலுப்படுத்துகிறது.