தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Calcium Deficiency : எலும்பு தேய்மானம்; உடல் வலி மற்றும் கால்சியம் குறைபாட்டை போக்கும்! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

Calcium Deficiency : எலும்பு தேய்மானம்; உடல் வலி மற்றும் கால்சியம் குறைபாட்டை போக்கும்! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
May 28, 2024 03:34 PM IST

Calcium Deficiency : எலும்பு தேய்மானம், உடல் வலி மற்றும் கால்சியம் குறைபாட்டை போக்க இந்த ஒரு பானம் மட்டும் போதும். இரவு உறங்கச் செல்லும் முன் பாலுடன் இந்த பொடியை சேர்த்து பருகினால் பலன் உறுதி.

Calcium Deficiency : எலும்பு தேய்மானம்; உடல் வலி மற்றும் கால்சியம் குறைபாட்டை போக்கும்! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!
Calcium Deficiency : எலும்பு தேய்மானம்; உடல் வலி மற்றும் கால்சியம் குறைபாட்டை போக்கும்! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

முன்னரெல்லாம் 60 வயதை கடந்தவர்களுக்கு மூட்டுவலி, கை-கால் வலியால் அவதிப்பட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம், 30 வயதை கடந்தாலே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

இன்றைய காலத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாக அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால்தான் ஏற்படுகிறது. மேலும் உடலில் கால்சியம், இரும்புச்சத்துக்களும் குறைந்துவிடுகிறது.

இவையனைத்தையும் சரிசெய்ய இந்த ஒரு பால் மட்டும் உங்களுக்கு உதவும். ஒரு வாரம் மட்டும் எடுத்துக்கொள்ள நன்மை கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 100 கிராம்

(கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. அதகளவிலான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது. பெண்களின் இடுப்புக்கு வலு சேர்க்கும். கை-கால் வலி, மூட்டு வலி பிரச்னைகள் இருக்காது)

கருப்பு எள் – 100 கிராம்

(எள்ளில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இடுப்பு வலி, கை-கால் வலி ஆகியவற்றை போக்கும். கருப்பைக்கு வலு சேர்க்கும். கருப்பை தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்)

கருப்பு உளுந்து – 200 கிராம்

(தோல் உளுந்துதான் எலும்பு தேய்மானத்தை சரிசெய்யும். இடுப்பு வலி, கை-கால் வலியைப்போக்கும்)

பார்லி – 100 கிராம்

(எலும்பு தேய்மானத்தை சரிசெய்யும், எலும்புகளுக்கு பலத்தைக்கொடுக்கும். இதில் அதிகளவில் கால்சியம் சத்து உள்ளது. எந்த வகையான எலும்பு தேய்மானத்தையும் போக்கும் திறன் பார்லி அரிசிக்கு உண்டு. உடலுக்கு நல்ல சுறுசுறுப்பைத்தரும். அந்த நாளுக்கு தேவையான ஆற்றலைத்தரும்)

ஏலக்காய் – 6

ஏலக்காயை தினமும் சேர்க்கும்போது, உடலுக்கு சுறுசுறுக்ப்பைத்தரும். வாய்துர்நாற்றத்தைப் போக்கும்.

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நல்ல நிறம் மாறி வரும் வரை வறுக்கவேண்டும்.

அனைத்தும் நன்றாக வறுத்து வந்தவுடன், ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவேண்டும். பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு சுக்குப்பொடி சேர்க்கவேண்டும். உளுந்து சேர்க்கும்போது ஏற்படும் வாயுத்தொல்லையை போக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும். உடலில் உள்ள அலர்ஜியைப் போக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.

தயாரித்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பயன்படுத்தும் முறை

தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் சூடான பாலில் இந்த பொடி ஒரு ஸ்பூனை சேர்த்து அதனுடன், நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் அல்லது வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து பருகவேண்டும். கருப்பட்டி கலந்து பருகினால் கூடுதல் பலன்களை தரும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்