Cabbage Sambar : கமகமக்கும் சுவையில் சாம்பார் ரெசிபி.. முட்டைகோஸ் பிடிக்காதவர்கள் கூட ஆசையாக வாங்கி சாப்பிடுவாங்க!
Cabbage Sambar : வழக்கமான சாம்பாரை விட இது வித்தியாசமான சுவையில் இருக்கும். வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்தி, போன்ற டிபன் ஐட்டங்களுக்கு அட்டகாசமான காமினேஷன் இது. இந்த சாம்பார் சூடான சாதத்துடன் சாப்பிடவும் ருசி அருமையாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்

Cabbage Sambar : முட்டை கோஸ் வாங்கினாலே இதுவரை கூட்டு பொரியல் என்றுதான் அதிகம் செய்திருப்பீர்கள். ஆனால் இனி ஒரு முறை முட்டைக்கோஸ் வாங்கும்போது சாம்பார் ட்ரை பண்ணுங்க. இந்த சாம்பார் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ்
துவரம் பருப்பு
பாசி பருப்பு
தக்காளி
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
எண்ணெய்
நெய்
வெந்தயம்
சீரகம்
கடுகு
உளுத்தம் பருப்பு
பூண்டு
உப்பு
மஞ்சள் தூள்
சாம்பார் தூள்
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
வெல்லம்
செய்முறை
ஒரு கப் துவரம் பருப்பை நன்றாக கழுவி சேர்த்து கொள்ள வேண்டும். துவரம்பருப்பு எடுத்த அதே கப்பில் அரை கப் பாசி பருப்பை சேர்த்து கொள்ள வேண்டும். பருப்பை நன்றாக கழுவிய பிறகு குக்கரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் நறுக்கிய முட்டை கோஸையும் கழுவி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 100 கிராம் சின்ன வெங்காயத்தை வெட்டி சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரண்டு பச்சை மிளகாயை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 6 பல் பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும்.
அதில் இரண்டு ஸ்பூன் சாம்பார் தூளை சேர்த்து கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் நன்றாக பழுத்த இரண்டு தக்காளியை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். பருப்பு காய் வேகும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து நன்றாக கிளறி விட வேண்டும். அதில் ஒரு லெமன் சைஸ் புளியை கரைத்து சேர்த்து கொதிக்க விட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தட்டிய வெல்லத்தை சேர்த்து கலந்து விட வேண்டும்
சாம்பாரை தாளிக்க அதில் இரண்டு ஸ்பூன் நெய் இரண்டு, ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டும். சூடாக்க வேண்டும். அதில் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து பொரிய விட வேண்டும். அரை ஸ்பூன் சீரகத்தை சேர்க்க வேண்டும். அதில் இரண்டு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் 100 கிராம் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயத்தை சிவக்க விட வேண்டும். வெங்காயம் நன்றாக சிவந்த வரும்போது அதில் ஒரு கைபிடி மல்லி இலையை சேர்த்து வதங்க வேண்டும். இந்த தாளிப்பை சாம்பாரில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் ருசியான முட்டைகோஸ் சாம்பார் ரெடி.
வழக்கமான சாம்பாரை விட இது வித்தியாசமான சுவையில் இருக்கும். வீட்டில் இட்லி தோசை, சப்பாத்தி, போன்ற டிபன் ஐட்டங்களுக்கு அட்டகாசமான காமினேஷன் இது. இந்த சாம்பார் சூடான சாதத்துடன் சாப்பிடவும் ருசி அருமையாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்
குறிப்பு: சாம்பாரில் வெல்லம் சேர்க்க பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
