Butter Milk Benefits : அடித்து வெளுக்கும் வெயிலை அடித்து துரத்தும் மோர்! உடலை குளிர்விப்பதுடன் எத்தனை நல்லது பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Butter Milk Benefits : அடித்து வெளுக்கும் வெயிலை அடித்து துரத்தும் மோர்! உடலை குளிர்விப்பதுடன் எத்தனை நல்லது பாருங்க!

Butter Milk Benefits : அடித்து வெளுக்கும் வெயிலை அடித்து துரத்தும் மோர்! உடலை குளிர்விப்பதுடன் எத்தனை நல்லது பாருங்க!

Priyadarshini R HT Tamil
Mar 24, 2024 07:47 AM IST

Benefits of Butter Milk : மோரின் முக்கிய நன்மைகளுள் ஒன்று செரிமானத்துக்கு உதவுவது. மோரில் உள்ள லாக்டோபேசிலஸ் அசிடோஃபிலஸ் மற்றும் லாக்டோபேசிலஸ் பல்கேரிகஸ் ஆகிய ப்ரோபயோடிக்குகள், குடல் நுண்ணுயிர்களை பராமரிப்பதில் உதவுகின்றன.

Butter Milk Benefits : அடித்து வெளுக்கும் வெயிலை அடித்து துரத்தும் மோர்! உடலை குளிர்விப்பதுடன் எத்தனை நல்லது பாருங்க!
Butter Milk Benefits : அடித்து வெளுக்கும் வெயிலை அடித்து துரத்தும் மோர்! உடலை குளிர்விப்பதுடன் எத்தனை நல்லது பாருங்க!

இது புளிப்பு, துவர்ப்பு, உப்பு கலந்த சுவையில் இருக்கும். சுவையுடன் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்தது. செரிமானம் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை மோரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது.

செரிமானத்துக்கு உதவுகிறது

மோரின் முக்கிய நன்மைகளுள் ஒன்று செரிமானத்துக்கு உதவுவது. மோரில் உள்ள லாக்டோபேசிலஸ் அசிடோஃபிலஸ் மற்றும் லாக்டோபேசிலஸ் பல்கேரிகஸ் ஆகிய ப்ரோபயோடிக்குகள், குடல் நுண்ணுயிர்களை பராமரிப்பதில் உதவுகின்றன. 

இந்த உடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியாக்கள், உணவை உடைத்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நுண்ணுயிர்களை தடுக்கவும் உதவுகிறது. ஒரு டம்ளர் மோர் பருகுவது, அஜீரணம், வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

மோர், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் உள்ள கொழுப்பு குறைவாக புரதம், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை கொடுத்து, செல்களின் வளர்ச்சி மற்றும் மீட்டுருவாக்கம் செய்ய உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி12, ரிபோஃப்ளாவின் மற்றும் கால்சியம், எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. 

ஆற்றலை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உணவின் மதிப்பை அதிகரிக்கிறது.

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் மற்றும் வைட்டமின் டி, வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்பை உருவாக்க சிறந்தது. இதில் உள்ள கால்சிய சத்துக்கள், எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது, ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நிலைகளை தடுக்க உதவுகிறது. வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. உங்கள் உடல் இந்த மினரலை முறையாக உபயோகிக்க உதவுகிறது. மோர் பருகுவது, உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதனுடனும் சரிவிகித உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து

ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு உடல் நீர்ச்சத்துடன் இருப்பது அவசியம். மோர், புத்துணர்வும், நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யும் பானமாகும். இதில் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் உள்ளன. அது உடலின் நீர் சமநிலையை உறுதிப்படுத்துகிறது. கடும் வெயிலுக்கு மோர் நல்லது. உடற்பயிற்சிக்குப் பின் மோர் பருகுவது நல்லது. இது உடல் இழந்த நீர்ச்சத்தை கொடுக்கிறது.

எடை மேலாண்மை

உடல் எடையை சரியாக பராமரிக்க விரும்புபவர்கள், மோரை பருகுவதால், அவர்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு என்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். பசியைக் கட்டுப்படுத்தும். மேரில் உள்ள புரதச்சத்துக்கள் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது.

சரும ஆரோக்கியம்

உள் உறுப்புக்களின் ஆராக்கியத்துக்கு மட்டும் மோர் நன்மை கொடுக்கவில்லை. உங்கள் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம், இயற்கை குணங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மிருதுவாக்குகிறது. முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. சருமத்துக்கு இயற்கை பளபளப்பைக் கொடுக்கிறது. வெயிலால் ஏற்படும் சரும வறட்சியைப்போக்க மோரை சிலர் பயன்படுத்துவார்கள்.

இதய ஆரோக்கியம்

உங்கள் உடலில் இதய ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசிய சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது சோடியத்துக்கு எதிராக வினைபுரிகிறது. இதில் உள்ள ப்ரோபயோடிக்குகள் உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

வாதத்தை சமப்படுத்த மோர் உதவுகிறது. இதனால் நடுக்கம், பதற்றம் ஆகிய உணர்வுகள் உடலில் குறைக்கப்படுகிறது. கோடை காலங்களில் உடலை குளிர்விக்கிறது. பித்த நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை தடுகிகறது. கபம் உள்ளவர்கள் மிதமான அளவி மட்டுமே எடுக்க வேண்டும். ஏனெனில் குளிர்ச்சி கபத்தை அதிகரித்துவிடும். எனவே அவர்கள் கோடை காலத்தில் மட்டும் எடுப்பது நல்லது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.