Burn Belly Fat : இரண்டே வாரத்தில் தொப்பை குறைய இந்த ஒரு பொடி போதும்! தினமும் வெறும் வயிற்றில் எடுக்க பலன் உறுதி!
Burn Belly Fat : நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மைதா உணவுகளை தவிர்த்து விடவேண்டும்.
பெரிதாக மெனக்கெடாமல் உடலில் உள்ள தொப்பை இரண்டே வாரத்தில் குறைக்க ஒரு அருமையான வழியை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தப்பொடியை இரண்டு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. உடல் சோர்வையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் உங்களின் தொப்பை கரைந்தோடும். ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் இதை முயற்சி செய்யலாம்.
இதை பின்பற்றும்முன், உங்கள் தொப்பையின் சுற்றளவை அளந்துகொள்ளுங்கள். இதை கடைபிடித்த பின்னர், நீங்கள் மீண்டும் உங்கள் தொப்பையின் அளவை அளந்து பாருங்கள். இரண்டு வாரம் கழித்து கட்டாயம் 5 இன்ச் உங்களின் தொப்பை இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் ஏற்படுத்தாமல் குறைந்திருக்கும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கப்
(அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. கறிவேப்பிலையை சாப்பிடும்போது இரும்பு மற்றும் கால்சிய சத்துக்கள் கிடைக்கிறது. நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. நாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும்போது, நாம் உண்ணும் உணவு செரித்தாலும், அதிக கொழுப்புகள் தொப்பையில் தங்கிவிடும். கறிவேப்பிலை இலையை தொடர்ந்து சாப்பிட தொப்பையில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை அது அகற்றுகிறது. கலோரியை விரைவாக எரிக்கும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் ஆகிய பிரச்னைகளையும் சரிசெய்யும்)
கறிவேப்பிலை இலைகளை நிழலில் 3 நாட்கள் காய வைக்க வேண்டும். வெயிலில் உலர்த்தவோ, வறுக்கவோ கூடாது
சீரகம் – அரை கப்
(சீர்+அகம் – சீரகம், நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றிவிட்டு, நமது உடலை சீரக வைத்துக்கொள்ள உதவும். உள்ளுறுப்புகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றும். குறிப்பாக, வயிற்றில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கொழுப்பு என அனைத்தையும் வெளியேற்றும். நமது அன்றாட உணவை செரிக்க வைத்து அதில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. அன்றாட தேவையான ஆற்றலை வழங்குகிறது. உடல் எடை குறைப்பின்போது குறையும் ஆற்றல் இழப்பை சரிசெய்கிறது)
இரண்டையும் நன்றாக காய வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதை மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து அப்படியே வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதில் தேன் கலந்தும் பருகலாம். சர்க்கரை நோயாளிகள் அப்படியே பருகுவது நல்லது. இரவில் உறங்கச் செல்லும் முன்னும் பருகலாம். இப்படி இரண்டு வாரம் செய்தாலே தொப்பை குறையும். இதை எத்தனை நாள் வேண்டுமானாலும் பருகலாம்.
காலையில் இதை பருகிவிட்டு, இடைவேளைக்குப்பின் வேறு எதுவேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த தண்ணீரை பருகும்போது, நிறைய தண்ணீர் பருகவேண்டும். உணவு உண்ணும் முன் மூன்று வேளையும் அரை லிட்டர் தண்ணீராவது பருகவேண்டும். அவ்வாறு செய்யும்போது, சாப்பிட்ட உணவுகளை நன்றாக செரித்து கெட்ட கொழுப்புக்களை வெளியேற்றிவிடும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மைதா உணவுகளை தவிர்த்து விடவேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்