கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! இந்த எண்ணெயை நீங்களே கலந்து பயன்படுத்தினால் அடர்ந்து வளரும்! எப்படி செய்வது?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! இந்த எண்ணெயை நீங்களே கலந்து பயன்படுத்தினால் அடர்ந்து வளரும்! எப்படி செய்வது?

கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! இந்த எண்ணெயை நீங்களே கலந்து பயன்படுத்தினால் அடர்ந்து வளரும்! எப்படி செய்வது?

Priyadarshini R HT Tamil
Updated Oct 12, 2024 02:12 PM IST

கொத்துக்கொத்தாக கொட்டும் முடியால் கவலையா? இந்த எண்ணெயை நீங்களே கலந்து பயன்படுத்தினால் அடர்ந்து வளரும். எப்படி செய்வது என்று பாருங்கள்.

கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! இந்த எண்ணெயை நீங்களே கலந்து பயன்படுத்தினால் அடர்ந்து வளரும்! எப்படி செய்வது?
கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! இந்த எண்ணெயை நீங்களே கலந்து பயன்படுத்தினால் அடர்ந்து வளரும்! எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

கேரியர் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் (இது உங்கள் தலைமுடியை கண்டிஷனிங் செய்கிறது. இதற்கு தலைமுடி சேதத்தை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

ஜோஜோபா எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் (தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. தலைமுடியின் வேர்க்கால்களில் எண்ணெயை தக்கவைக்கிறது.

எசன்ஷியல் எண்ணெய்

ரோஸ் மேரி எசன்ஷியல் எண்ணெய் – 10 சொட்டுகள் (தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுகிறது)

லாவண்டர் எண்ணெய் – 10 சொட்டுகள் (அமைதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதுவும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். மனஅழுத்தத்தால் ஏற்படும் தலைமுடி உதிர்வைக் குறைக்கும்.

பெப்பர் மின்ட் எண்ணெய் – 5 சொட்டுகள் (தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்)

செய்முறை

ஒரு கண்ணாடி பவுலில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெயை கலந்துகொள்ளவேண்டும்.

அதில் ரோஸ்மேலி, லாவண்டர், பெப்பர் மின்ட் ஆகிய எசன்ஷியல் எண்ணெய்களை சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கவேண்டும். நன்றாக கலக்கவேண்டும் அல்லது மூடியிட்ட பாட்டிலில் வைத்து நன்றாகக் குலுக்க வேண்டும்.

இந்த எண்ணெயை தலையில் தேய்க்கும் முன்னர் இது உங்கள் சருமத்தில் ஏதேனும் அலர்ஜியை ஏற்படுத்துகிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

கையில் அல்லது ஷெல்பி பாட்டில்களைப் பயன்படுத்தி இந்த எண்ணெயை தலையில் தடவுங்கள். முடி உதிர்வு அதிகம் உள்ள இடத்தில் தடவுங்கள். உங்கள் தலையில் எண்ணெயை தடவி வட்ட வடிவில் நன்றாக மசாஜ் செய்யவேண்டும். இதுபோல் 10 நிமிடம் செய்தால், அது ரத்த ஓட்டத்தை தூண்டும்.

இதை உங்கள் தலையில் அரை மணி நேரம் விட்டுவிடுங்கள் அல்லது ஓரிரவு விட்டு அடுத்த நாள் காலையில் தலையை அலசினால், உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வாரத்தில் 2 அல்லது மூன்று முறை இதைச் செய்தால் உங்கள் தலையில் முடி அடர்த்தியாக வளரும்.

நன்மைகள்

தேங்காய் எண்ணெயில் ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் தலைமுடி புரதச்சத்துக்களை இழப்பதை குறைக்கிறது. உங்கள் வறண்ட முடிக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.

ஜோஜோபா எண்ணெய் உங்கள் தலையில் எண்ணெய் பதத்தை தக்கவைத்து வறட்சியைத் தடுக்கிறது. இது நீங்கள் தலைமுடி இழப்பதை தடுக்கும்.

ரோஸ்மேரி எசன்ஷியல் எண்ணெய் உங்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் உட்பொருட்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லாவண்டர் எண்ணெய்க்கு உங்கள் மனதை அமைதிப்படுத்தும் தன்மை உள்ளது. இது உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. மனஅழுத்தமும் தலைமுடி உதிர்வுக்கு காரணமாகிறது.

மெப்பர்மின்ட் எண்ணெயில் உள்ள குளுமைப்படுத்தும் திறன், உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன.

குறிப்புகள்

உணவு மற்றும் நீர்ச்சத்து – தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு சரிவிகித உணவு மிகவும் முக்கியமானது. உங்கள் உடலில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக பயோடின்கள், வைட்டமின் டி மற்றும் சிங்க் சத்துக்கள் கட்டாயம் இடம் பெறவேண்டும்.

உங்கள் தலைமுடியில் அதிக சூடு, இறுக்கமான ஹேர்ஸ்டைல் ஆகியவை செய்வதை தடுக்கவேண்டும். இது கூந்தல் உடைவதை தடுக்கும்.

உங்களுக்கு தொடர்ந்து முடி உதிர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. எனவே சரும நோய் நிபுணரை அணுகுங்கள். தனிப்பட்ட அறிவுரையைப் பெற்று பயன்பெறுங்கள்.

உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்க உங்களுக்கு இயற்கையான எண்ணெய் உதவும். இது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவும். ஆனால் இதை செய்த உடனேயே நீங்கள் பலனை எதிர்பார்க்கக்கூடாது. இந்த எண்ணெயை நீங்கள் அன்றாடம் உபயோகித்து பொறுமையுடன் காத்திருந்தால் உங்களுக்கு பலன் நிச்சயம் கிடைக்கும். அழகிய தலைமுடிக்கு, அழகிய தலைகளே காரணம். எனவே உங்கள் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை என அனைத்தும் ஆரோக்கியமாகும்போது தலைமுடியின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.