Build Your Muscles : கட்டுமஸ்தான உடலைப் பெறவேண்டுமா? சரசரவென தசைகளை வலுப்படுத்தும் உணவுகள் இவைதான்!
Build Your Muscles : கட்டுமஸ்தான உடலைப் பெறவேண்டுமெனில், சரசரவென தசைகளை வலுப்படுத்தும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

வலுவான தசைகளைப் பெறுவதற்கும், தசைகளை சரிசெய்வதற்கும் என்ன சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தசைகளை விரைவாக வலுப்படுத்துவது
தசைகளை வலுப்படுத்துவது மற்றும் சரிசெய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். நீங்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவராக இருந்தாலும், அத்தலடிக்காக இருந்தாலோ அல்லது வழக்கமான வேலைகளை செய்பவராக இருந்தாலோ உங்களுக்கு தசைகளை வலுப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நீங்கள் சரிவிகித உணவு உட்கொள்வதும், உங்கள் தசைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான உணவை உட்கொள்வது, உங்களின் தசைகள் வலுவடையவும், வளர்ச்சியடையவும் உதவுகிறது. தசைகள், திசுக்களை வளரச்செய்து, வீக்கத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. உங்கள் தசைகளை இறுகச்செய்யும் உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
இறைச்சி
புரதம், இரும்பு மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது. இறைச்சி, உடலுக்குத் தேவையான முக்கிய அமினோ அமிலங்களை வழங்குகிறது. அது தசைகளை சரிசெய்து, வளர்ச்சிக்கு உதவுகிறது. இறைச்சியில் உள்ள இரும்புச்சத்துக்கள், தசைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது. தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.
சிக்கன் பிரஸ்ட்
உயர்தர புரதச்சத்துக்கள் நிறைந்தது. கொழுப்பு குறைந்தது. இதில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. தசைகளை வலுப்படுத்த மிகவும் அவசியம். இது உடலுக்கு தேவையான முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களை வழங்குகிறது.
முட்டை
முட்டைகளில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆரோக்கிய கொழுப்புக்களும், முக்கியமான வைட்டமின்களும் உள்ளது. முட்டை, புரதச்சத்தை வழங்கும் ஒரு முக்கிய உணவாகும். இதில் தசைகளின் வளர்ச்சி மற்றும் அதை சரிசெய்ய உதவும் 9 அமினோ அமிலங்கள் உள்ளன.
கிரீக் யோகர்ட்
புரதம், ப்ரோபயோடிக்ஸ் மற்றும் கால்சியச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கிரீக் யோகர்டில் கேசின் மற்றும் வே புரோட்டின்கள் உள்ளது. இவையிரண்டும், தசைகள் வலுவடைய உதவுபவையாகும். இதில் உள்ள ப்ரோபயோடிக்குகள், உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றன.
குயினோவா
புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நார்ச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. குயினோவா ஒரு முழு புரத குடோன் என்றே அழைக்கலாம். எனவே உங்கள் தசைகளை சரிசெய்யவும், வளர்ச்சிக்கும் குயினோவா உதவுகிறது. குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
ஃபேட்டி ஃபிஷ்
ஃபேட்டி ஃபிஷ்ஷில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதில் உயர்தர புரதச்சத்துக்களும், வைட்டமின் பியும் உள்ளது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், தசைகளின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தசைகளில் புண்கள் ஏற்படாமல் காக்கிறது. புரதச்சத்துக்கள் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.
காட்டேஜ் சீஸ்
இதில் அதிகளவில் கேசின் புரதம், கால்சியம், பி வைட்டமின்கள் உள்ளது. காட்டேஜ் சீஸ்சில் ஒரே இரவில் தசைகளை சரிசெய்யும், குறைவாக வெளியாகும் புரதச்சத்துக்கள் உள்ளது. இது ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
பாதாம்
பாதாமில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் ஈ, மெக்னீசியச் சத்துக்களும் உள்ளன. பாதாம், புரதச்சத்துக்களைக் கொடுக்கிறது. தசைகளை அது சரிசெய்கிறது. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், நீடித்த ஆற்றலைக் கொடுக்கிறது. தசைகள் சேதமடைவதை குறைக்க வைட்டமின் ஈ உதவுகிறது.
கீரை
கீரைகளில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் நைட்ரேட்கள் அதிகளவில் உள்ளன. கீரைகள் தசைகளின் இயக்கத்துக்கு உதவுகிறது. இது உடலுக்கு தேவையான முக்கியமான மினரல்களை வழங்குகிறது. தசைகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தசைகளை வலுப்படுத்துகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இதில் உள்ள எண்ணற்ற கார்போஹைட்ரேட்கள், வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் ஆகியவை உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்கள், தசைகளை வலுப்படுத்துகிறது. வீக்கத்தை குறைக்கிறது.

டாபிக்ஸ்