தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Broccoli Soup : சொட்டும் வியர்வை ஏற்படும் சளியால் அவதியா? இதமான ப்ராக்கோலி சூப் பருகி பலன்பெறுங்கள்!

Broccoli Soup : சொட்டும் வியர்வை ஏற்படும் சளியால் அவதியா? இதமான ப்ராக்கோலி சூப் பருகி பலன்பெறுங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 16, 2024 11:10 PM IST

Broccoli Soup : இந்த சூப் சாப்பாட்டுக்கும் சிறந்தது. ஏனெனில் இதில் ஒரு முக்கிய உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே வீட்டில் அடிக்கடி ப்ராக்கோலி சூப் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Broccoli Soup : சொட்டும் வியர்வை ஏற்படும் சளியால் அவதியா? இதமான ப்ராக்கோலி சூப் பருகி பலன்பெறுங்கள்!
Broccoli Soup : சொட்டும் வியர்வை ஏற்படும் சளியால் அவதியா? இதமான ப்ராக்கோலி சூப் பருகி பலன்பெறுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

வெண்ணெய் – ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 12 பல்

உருளைக்கிழங்கு – 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தழை – சிறிது

செய்முறை -

முதலில் ப்ரோக்கோலியை கழுவி சுத்தம் செய்துவைத்துக்கொண்டு, அதை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

குக்கரை சூடாக்கி அதில் வெண்ணெய் சேர்க்கவேண்டும். பின்னர், வெண்ணெய் உருகியவுடன், நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் ப்ராக்கோலி துண்டுகள், உப்பு மற்றும் பொடித்த மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் அனைத்தையும் நன்றாக கலந்துவிடவேண்டும்.

குக்கரில் 2 கப் தண்ணீரை சேர்த்து, மூடியால் மூடி, மிதமான தீயில் குறைந்தபட்சம் 2 விசில் வரும் வரை வேகவைக்கவேண்டும்.

சமைத்த பொருட்களை தண்ணீருடன் ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி, அதை முழுவதும் ஆறவிடவேண்டும்.

ஆறிய பொருட்களை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அனைத்தையும் மிருதுவான விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, இந்த விழுதை ஒரு கடாயில் சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும். அது மிகவும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்க்கவேண்டும்.

மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவேண்டும்.

சூப் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.

ஆரோக்கியமான ப்ராக்கோலி சூப் உங்களுக்கு விருப்பமான ரொட்டியுடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது. துளி மல்லித்தழை தூவி பருகவேண்டும்.

மழைக்காலத்தில் மட்டுமல்ல, வெயிலால் ஏற்படும் வியர்வை காரணமாக கோடை காலத்திலும் சிலருக்கு சளி தொற்றுக்கள் ஏற்படுகிறது. கோடையில் நாம் அதிகம் பழச்சாறுகள் எடுப்பதாலும் சளித்தொல்லைக்கு ஆளாக நேரிடுகிறது.

எனவே மாலை நேரத்தில் இதுபோன்ற சூப்களை செய்து மிதமான சூட்டில் பருகினால், நீங்கள் சளிக்கு என்று தனியாக மருந்துகள் எடுக்க தேவையில்லை. இதுவே வெயில் காலத்தில் ஏற்படும் சாதாரண சளித்தொல்லையை போக்கிவிடும்.

ப்ராக்கோலியின் நன்மைகள்

மேலும் ப்ராகோலி ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காயாகும். இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எனவே இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால் இதை சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு இதுபோல் சூப்பாக செய்துகொடுக்க மறுக்காமல் சாப்பிடுவார்கள். ப்ராகோலி தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாகக் கிடைக்கிறது. எனவே இதை வைத்து பல உணவுகளை செய்து சாப்பிடலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ப்ராக்கோலி சூப்க்கு குறைந்த அளவு பொருட்களே போதுமானது. இதில் சேர்க்கப்படும் பொருட்களே இதன் சுவையையும் அதிகரிக்கிறது.

இந்த சூப் சாப்பாட்டுக்கும் சிறந்தது. ஏனெனில் இதில் ஒரு முக்கிய உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே வீட்டில் அடிக்கடி ப்ராக்கோலி சூப் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்