தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Broccoli And Almond Soup

Broccoli and Almond Soup: குளிருக்கு இதமான பிராக்கோலி பாதாம் சூப்

I Jayachandran HT Tamil
Dec 01, 2022 09:52 PM IST

குளிர்காலத்தில் அதிகாலையிலும், மாலைவேளைகளிலும் அனைவருக்கும் ஏற்ற சுவையான பிராக்கோலி பாதாம் சூப் செய்முறை பற்றி பார்க்கலாம்.

பிராக்கோலி பாதாம் சூப்
பிராக்கோலி பாதாம் சூப்

ட்ரெண்டிங் செய்திகள்

பிராக்கோலி கால் கிலோ

முக்கால் லிட்டர் காய்கறிகள் வேகவைத்த தண்ணீர்

50 கிராம் பாதாம் பருப்பு பவுடர்

கால் லிட்டர் ஸ்கிம்மிடு பால்

1 டீஸ்பூன் மிளகுத் தூள்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை-

அடுப்பில் வாணலியை வைத்து காய்கறி வேகவைத்த தண்ணீரில் பிராக்கோலியை உதிரி உதிரியாக பிய்த்துப் போடவும்.

10 நிமிடங்கள் கொதிக்க விட்டு பிராக்கோலி மென்யாக வேக வைக்கவும்.

அத்துடன் பாதாம் பொடி, பாலை சேர்க்கவும்.

அதை கொதிக்க விட்டு நன்கு கலக்கவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கிவைத்து சிறிது பாதாம் பவுடர், மிளகுத் தூளை தூவி பரிமாறவும்.

WhatsApp channel