Brinjal Thokku : கத்திரிக்காய் தொக்கு; டிபஃன், சாதம் என தொட்டுக்கொள்ள ஏற்றது! சூப்பர் சுவையும் நிறைந்தது!
Brinjal Thokku : கத்திரிக்காய் தொக்கு; டிபஃன், சாதம் என தொட்டுக்கொள்ள ஏற்றது! சூப்பர் சுவையும் நிறைந்தது!

தேவையான பொருட்கள்
பச்சை கத்திரிக்காய் – அரை கிலோ
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு நறுக்கியது
பூண்டு – 9 பற்கள்
பச்சை மிளகாய் – 9 நறுக்கியது
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
கல்லுப்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் இடித்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கிக்கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் கவை வதக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், கல்லுப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
கடாயை மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவேண்டும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவேண்டும்.
கத்தரிக்காய் மற்றும் இந்த கலவையை நன்றாக மசித்துவிடவேண்டும். கத்தரிக்காய் தொக்கு சாப்பிட தயார்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என டிபஃனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது சாதம்க்கும் தொட்டுக்கொண்டும், சாதத்தில் கலந்தும் சாப்பிட சுவை அள்ளும்.
இதற்கு பச்சை நிற கத்தரிக்காய் சிறந்தது. பச்சை மிளகாய் மசாலா இதன் முக்கியமான பொருள். அதுதான் இந்த தொக்குக்கின் சுவையை அதிகரிக்கிறது. அதையும் இடித்து சேர்க்கும்போது கூடுதல் சுவை நிறைந்ததாக உள்ளது.
மசாலா அரைத்தல், தாளித்தல், காய்கறி சேர்த்து வேகவைத்தல் என மூன்றே ஸ்டெப்பில் ஒரு சூப்பர் சுவை நிறைந்த கத்தரிக்காய் தொக்கை செய்துவிடலாம். இதை செய்து முடிக்க அதிகபட்சமாகவே அரை மணி நேரம் போதும்.
இதற்கு நீங்கள் பயன்படுத்தும் கத்தரிக்காய்கள் பிஞ்சாக இருக்க வேண்டும். முத்தின கத்தரிக்காயில் செய்தால் குழைந்து தொக்கு பதத்திற்கு வராது மற்றும் சுவையும் நன்றாக இருக்காது. பிஞ்சு கத்தரிக்காய் விரைவிலேயே வெந்துவிடும்.
நேரம் குறைவாக இருக்கும்போது, சாம்பார், ரசம் என வைத்து சிரமப்பட்டுக்கொண்டிருக்காமல், இதை எளிதாக செய்து முடித்துவிடலாம். சூடான சாதத்தில் நெய் கலந்து ஒரு அப்பளம் அல்லது ஊறுகாயுடன் எளிமையான மதிய உணவே முடித்துவிடலாம்.
நன்றி - ஹேமா சுப்பிரமணியன்.
கத்தரிக்காயின் நன்மைகள்
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.
ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது. இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்