Brinjal Rice Podi : கத்தரிக்காய் சாதம், அதற்கு தேவையான மசாலாப்பொடி! இதோ இரண்டு ரெசிபியும் தெரிஞ்சுக்கங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Brinjal Rice Podi : கத்தரிக்காய் சாதம், அதற்கு தேவையான மசாலாப்பொடி! இதோ இரண்டு ரெசிபியும் தெரிஞ்சுக்கங்க!

Brinjal Rice Podi : கத்தரிக்காய் சாதம், அதற்கு தேவையான மசாலாப்பொடி! இதோ இரண்டு ரெசிபியும் தெரிஞ்சுக்கங்க!

Priyadarshini R HT Tamil
Updated Jun 21, 2024 01:02 PM IST

Brinjal Rice Podi : கத்தரிக்காய் சாதம், அதற்கு தேவையான மசாலாப்பொடி என இதோ இரண்டு ரெசிபியும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Brinjal Rice Podi : கத்தரிக்காய் சாதம், அதற்கு தேவையான மசாலாப்பொடி! இதோ இரண்டு ரெசிபியும் தெரிஞ்சுக்கங்க!
Brinjal Rice Podi : கத்தரிக்காய் சாதம், அதற்கு தேவையான மசாலாப்பொடி! இதோ இரண்டு ரெசிபியும் தெரிஞ்சுக்கங்க! (dwaraka organic)

இந்த மசாலாப்பொடியை நீங்கள் அரைத்து வைத்துக்கொண்டால் அதை நீங்கள் அவ்வப்போது கத்தரிக்காய் சாதமும் செய்ய பயன்படுத்தலாம். கத்தரிக்காய் சாதம் சுவை நிறைந்ததும் ஆகும்.

மேலும் இந்தப் பொடியை நீங்கள் மற்ற காய்களை வறுக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு மல்டிபர்பஸ் மசாலாப் பொடிதான்.

கத்தரிக்காய் சாதம் செய்ய தேவையான மசாலாவை முதலில் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

மசாலா பொடி அரைக்க தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

வரமல்லி – 2 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

பட்டை – 1 இன்ச்

கிராம்பு – 4

ஏலக்காய் – 2

வரமிளகாய் – 2

புளி – 3 இன்ச்

தேங்காய் துருவல் – ஒரு கப்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

வெல்லம் – சிறிதளவு

செய்முறை

கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு பாதி சிவக்கும் வரை வறுக்கவேண்டும். பின்னர் வரமல்லி சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வர மிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போகும் வரை வறுத்து, அனைத்துப்பொருட்களையும் ஆறவிடவேண்டும்.

ஆறிய மசாலா பொருட்களை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து, பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

கத்திரிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் 

கத்திரிக்காய் – கால் கிலோ

வேகவைத்த சாதம் – ஒரு கப்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

வேர்க்கடலை – கால் கப்

வர மிளகாய் – 2

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

கத்தரிக்காய் சாத மசாலா தூள் – 4 ஸ்பூன்

நெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை

கத்திரிக்காய் சாதம் செய்ய

கத்திரிக்காயை நறுக்கி உப்பு தண்ணீரில் போட்டு வைக்கவேண்டும். அப்போதுதான கத்தரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும்.

ஒரு அகல பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து தாளிக்கவேண்டும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், வேர்க்கடலை, பெருங்காயத்தூள், வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

இவையனைத்தும் நன்றாக வறுபட்ட பின்னர், அதில் கத்திரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கவேண்டும். அதனுடன், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா தூள் சேர்த்து கிளறவேண்டும்.

அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவேண்டும். கத்திரிக்காய் நன்றாக வதங்கியவுடன், அதில் வேகவைத்த சாதம் சேர்த்து கிளறவேண்டும். கடைசியாக அதில் நெய் ஊற்றி கிளறி, சூடாக பரிமாறவேண்டும்.

சூப்பர் சுவையில் கத்தரிக்காய் சாதம் தயார். இதை வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தற்போது பள்ளிகள் துவங்கிவிட்டதால் குழந்தைகளுக்கு லன்ச் பேக் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காயம் அல்லது வெள்ளரி தயிர் பச்சடி போதுமானது அல்லது ஏதேனும் ஒரு கூட்டு, பொரியல் அல்லது உருளை வறுவல் அல்லது 65 என எதாவது செய்து சாப்பிடலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.