Brinjal Pachadi : வித்யாசமான சைட் டிஷ்! கத்தரிக்காய் பச்சடி! இட்லி, தோசை, வெண்பொங்கலுக்கு ஏற்றது!
Brinjal Pachadi : வித்யாசமான சைட் டிஷ்! கத்தரிக்காய் பச்சடி! இட்லி, தோசை, வெண்பொங்கலுக்கு ஏற்றது!
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 4
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 20
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன்
பெங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய்த்துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
குக்கரில் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், பாசிப்பருப்பு மற்றும் 2 கப் தண்ணீர் விட்டு 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய்த்துருவல் மற்றும் பொட்டுக்கடலையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு மற்றும் உளுந்து மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவேண்டும். பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் புளிக்கரைசல், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிடவேண்டும்.
பின் வேகவைத்த கத்தரிக்காய் பருப்பு கலவையை சேர்த்து அதோடு சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் மற்றும் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து 7 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவேண்டும். சூடாக இட்லி, தோசை அல்லது வெண் பொங்கலுக்கு பரிமாறவும்.
சாம்பார் பொடி சிறிதளவு சேர்த்தால் போதும். விருப்பமில்லாதவர்கள் சாம்பார் பொடி சேர்க்காமல் பச்சை மிளகாயின் அளவை கூட்டிக் கொள்ளலாம்.
அரைக்கும் விழுதில் பொட்டுக்கடலை சேர்க்காமல் தேங்காய் மட்டும் அரைத்துக் கொள்ளலாம். பச்சடி சாம்பார் போல கெட்டியாக இருக்கக்கூடாது.
வித்யாசமான சுவையில் இது டிஃபனை அதிகளவில் விரும்பி சாப்பிட வைக்கும்.
நன்றி – விருந்தோம்பல்.
கத்தரிக்காயின் நன்மைகள்
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.
ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது. இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்